கௌதம் கம்பீர் மீது ஸ்ரீசாந்த் பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்திய பின்னர், கம்பீருக்கு ஆதரவாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் குரல் கொடுத்துள்ளார். இந்திய கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையே நடந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் போது, கவுதம் காம்பீர், ஸ்ரீசாந்த் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீசாந்த், கம்பீர் தன்னை இழிவாகப் பேசியதாகவும், அதற்கு அவர் பதிலடி கொடுத்ததாகவும் கூறினார். ஸ்ரீசாந்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கம்பீர் சமூக வலைதளத்தில் மர்மமான பதிவு ஒன்றை வெளியிட்டார். "உலகம் உங்களை கவனிக்கும்போது புன்னகைக்கவும்" என்ற தலைப்புடன் தனது சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தார். கம்பீரின் பண்பான பதிலுக்கு இர்பான் பாராட்டு தெரிவித்து, "புன்னகைதான் சிறந்த பதில் சகோதரரே" என்று பதிலளித்தார். 


மேலும் படிக்க | ஐ.பி.எல் 2024: மும்பை இந்தியன்ஸில் ரோகித் இடத்துக்கு போட்டி போடும் மூன்று இளம் வீரர்கள்..!


இதற்கிடையில், மற்றொரு வீடியோவைப் பகிர்ந்து, இரு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே நடந்த சண்டைக்கு வழிவகுத்த சம்பவத்தின் விவரங்களை ஸ்ரீசாந்த் வெளியிட்டார். கம்பீர் தன்னை 'பிக்ஸர்' என்று அழைத்ததாக ஸ்ரீசாந்த் தெரிவித்தார். "நான் அவரிடம் ஒரு மோசமான வார்த்தையையோ, தவறான வார்த்தையையோ பயன்படுத்தவில்லை. நான் "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று மட்டுமே கேட்டேன். உண்மையில், அவர் தொடர்ந்து "பிக்ஸர், பிக்ஸர், நீ ஒரு பிக்ஸர், F*** off பிக்ஸர்" என்று கூறியதால் நான் கிண்டலாக சிரித்துக் கொண்டே இருந்தேன். 



இதுதான் அவர் பயன்படுத்திய மொழி. நடுவர்கள் அவரை கட்டுப்படுத்த முயற்சித்தபோதும், அவர் என்னை பிக்ஸர் என்று அழைத்துக் கொண்டே இருந்தார்," என்று ஸ்ரீசாந்த் தன்னுடைய Instagram பதிவில் விளக்கமளித்துள்ளார். "எந்த காரணமும் இல்லாமல் என்னை அவமதித்தவர், எந்த காரணமும் இல்லாமல் தனது சக ஊழியர்களுடன் சண்டையிடும் ஃபைட்டர் (காம்பீர்) பற்றிய சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்பினேன். அவர் விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களையும் மதிப்பதில்லை," என்று ஸ்ரீசாந்த் முன்னதாக விமர்சித்திருந்தார்.


இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் இடையே நடந்த வார்த்தைப் போரினைப் பற்றி  பல கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் கம்பீரை ஆதரிக்கின்றனர், மற்றவர்கள் ஸ்ரீசாந்த் பக்கம் இருக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிவர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


மேலும் படிக்க | கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஓர் இடத்தை பிடித்த ஸ்ரீசாந்தின் அபரிமித சாதனைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ