புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட்டின் அனுபவமிக்க வீரர் ஒருவர், ஐபிஎல்லில் கோடிகளில் ஏலத்தில் எடுக்கப்பட்ட உடனே, இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீரர் வேறு யாருமல்ல, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ வேட். மெகா ஏலத்தில் மேத்யூ வேட் ரூ.2 கோடியே 40 லட்சத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். 


இம்முறை மெகா ஏலத்தில் மேத்யூ வேடுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டதால், குஜராத் டைட்டன்ஸ் அணி, மேத்யூ வேட்டை ரூ.2 கோடியே 40 லட்சத்துக்கு தனது முகாமில் சேர்த்தது. 


மேலும் படிக்க | அஃப்ரிடி ஐபிஎல்லில் விளையாடினால் அவர் விலை 200 கோடி ரூபாயா?


இந்தியன் பிரீமியர் லீக் (IPL mega auction) 2022 மெகா ஏலத்தில் பத்து அணிகளும் உலகெங்கிலும் உள்ள சிறந்த வீரர்களின் மீது பணத்தை வாரி இறைத்தன. 204 வீரர்களை, இந்த பத்து அணிகளும் வாங்க செலவானத் தொகை சுமார் 552 கோடி ரூபாய் ஆகும்.


இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சில முன்னணி வீரர்கள் இந்த ஆண்டு ஐபில்  (The Indian Premier League) போட்டிகளில் விளையாட ஐபிஎல் உரிமையாளர்களுடன் ஒப்பந்தங்களைப் பெற்றதற்கு கிடைத்த சம்பளம் தான் ஏலத்தொகை.


ஐபிஎல்லின் (The Indian Premier League) இந்த பெரிய ஒப்பந்தம் கிடைத்தவுடன், திடீரென மேத்யூ வேட் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். மேத்யூ வேட் இங்கிலாந்தின் உள்நாட்டு போட்டி கவுண்டி கிரிக்கெட்டில் வொர்செஸ்டர்ஷைர் கிளப்பிற்காக விளையாடினார்.


மேலும் படிக்க | ஐபிஎல் 2022 ஏலத்தில் அணி மாறிய டாப் கிரிக்கெட்டர்கள்


ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் கடந்த ஆண்டு 2021 டி20 உலகக் கோப்பை போட்டியில் மூன்று சிக்ஸர்களை அடித்து தனது அணியை வெற்றிப் பெறச் செய்தார்.


இங்கிலாந்தின் உள்நாட்டு போட்டி கவுண்டி கிரிக்கெட்டின் முழு சீசனிலும் விளையாடுவதாக  வொர்செஸ்டர்ஷைர் கிளப்புடன் மேத்யூ வேட் ஒப்பந்தம் செய்திருந்தார்.


ஆனால் இப்போது அவரது பெயரை திரும்பப் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.  ஐபிஎல் தொடரில் மேத்யூ வேட் இரண்டாவது முறையாக விளையாடவுள்ளார். முன்னதாக அவர் 2011 சீசனில் ஐபிஎல் போட்டித்தொடரில் விளையாடினார். 


மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தில் அதிக சம்பள உயர்வு பெற்ற 5 வீரர்கள்


மேத்யூ வேட் பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக கிரிக்கெட் விளையாடினார். அப்போது டெல்லி அணியின் கேப்டன் பதவி வீரேந்திர சேவாக் கையில் இருந்தது.


இம்முறை புதிய ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் தனது அணியில், நட்சத்திர கிரிக்கெட் வீரர் மேத்யூ வேட்டை சேர்த்துள்ளது. 


இந்த முறை ஐபிஎல்லில் 10 அணிகள் களமிறங்குவதால், ஐபில் போட்டிகளின் சுவாரசியமும் பரபரப்பும் இரட்டிப்பாகும்.  ஐபிஎல் 2022 சீசன் இந்தியாவில் மார்ச் 26 தொடங்கி மே மாதம் வரை நடைபெறும்.


மேலும் படிக்க | IPL 2022 mega auction: ஏலத்தில் அதிக சம்பள உயர்வு பெற்ற 5 வீரர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR