இந்திய அணியில் புறக்கணிக்கப்படுகிறாரா முகமது ஷமி?
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக இருந்த முகமது ஷமி, தொடர்ந்து 3 தொடர்களில் இடம்பெறாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சுற்றுபயணம் செய்ய இருக்கும் இலங்கை அணி, மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக்குழு இன்று வெளியிட்டது. தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் விராட் கோலி மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து குணமடையாமல் இருக்கும் கே.எல் ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பெயர்கள் அணி தேர்வில் பரிசிலீக்கப்படவில்லை.
மேலும் படிக்க | இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - டெஸ்ட் கேப்டன் ரோகித்சர்மா
அதேநேரத்தில் நீண்ட நாட்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஜடேஜா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அவருடன் சஞ்சு சாம்சனும் 20 ஓவர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அணி தேர்வு குறித்து பேசிய சேத்தன் சர்மா, இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 20 ஓவர் போட்டியில் இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
ரோகித் சர்மா தலைமையின் கீழ் இந்திய அணியின் எதிர்கால கேப்டன் பொறுப்புக்கு கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தயார் செய்யப்படுவார்கள் எனக் கூறிய அவர், சஞ்சு சாம்சன் அடுத்த 20 ஓவர் உலக கோப்பைக்கான பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அவரது ஆட்டதைப் பொறுத்து முடிவு செய்யவும் தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில் ஓய்வளிக்கப்பட்டுள்ள முகமது ஷமி குறித்து தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா எதுவும் தெரிவிக்கவில்லை.
தென்னாப்பிரிக்கா தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் ஓய்வளிக்கப்பட்ட முகமது ஷமி, இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால், இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்படுகிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க | இந்திய இளம் வீரர்களின் காதலிகள் இவர்களா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR