இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  டி 20 உலகக் கோப்பை 2021 க்குப் பிறகு டி 20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டன் யார் என்றும் இப்போதிலிருந்தே கேள்வி எழுந்துள்ளது. ரிஷப் பந்த்தை கேப்டனாக நியமித்தால் சிறப்பாக இருக்கும் என்றும்,  துணை கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படலாம் என்றும் ரசிகர்கள் இப்போதே இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் இன்று தனது 24வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் தற்போது சிஎஸ்கே கேப்டனான தோனியைப் போலவே பந்த்-ம் ஒரு அதிரடி ஆட்டக்காரராக காணப்படுகிறார். ஆரம்ப காலங்களில் சொதப்பி வந்த பந்த், ஐபிஎல் 2021 போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டிகளில் தனது கேப்டன்சி திறமையை நிரூபித்து இருக்கிறார். தற்போது டெல்லி அணி புள்ளி  பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது மேலும் பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.  



மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் தனது கேப்டன்சி திறமையை நிரூபித்து  ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்.  இருந்தாலும் இந்த முறை மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு கம்மியாகவே உள்ளது.  24வயதே ஆகும் பண்டிற்கு கேப்டன்சியை கொடுத்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியை வழி நடத்த உதவியாக இருக்கும் என்று பலர் கருதுகின்றனர்.


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் டி 20 அணியின் துணை கேப்டனாக பந்த் நியமிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். "ரிஷப் பண்ட்டை நான் மனதில் வைத்துக்கொள்வேன், ஏனென்றால் அவர் டெல்லி அணியை வழிநடத்திய விதம் மற்றும் டி -20 போட்டியில் அவர் செய்த பந்துவீச்சு மாற்றங்கள் மிகவும் புத்திசாலித்தனமான முறையில் அவரது சிறந்த கேப்டன்சி திறமையை  காட்டுகிறது.  எனவே, கேஎல் ராகுல் மற்றும் பந்த் ஆகிய இருவரும் துணை கேப்டன்களாக நான் பார்க்கிறேன், ”என்று கவாஸ்கர் கூறினார்.



டிஆர்எஸ்யை கையாளுவதிலும் சிறந்தவர்


தோனியைப் போலவே, பந்த் டிஆர்எஸ் வாய்ப்புகளைக் கண்டறிவதில் தனது திறமையை காட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட் தொடரின் போது, கேப்டன் விராட் கோலி டிஆர்எஸ் எடுப்பதில் தயங்கியபோது பண்ட்டின் கோரிக்கையை ஏற்று பல முறை பயனடைந்தார்.


அதிரடியாக 1000 டெஸ்ட் ரன்களை எட்டிய இந்திய விக்கெட் கீப்பர்


2020-21 பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் கபாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி டெஸ்டில் தோனியின் சாதனையை பந்த் முறியடித்தார். 27 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டிய பந்த், அதேசமயம் எம்எஸ் தோனி 32 டெஸ்ட் இன்னிங்ஸ்சில் 1000 ரன்கள் அடித்தார்.


சிக்ஸருடன் தனது டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கிய முதல் இந்திய வீரர்


2018 இல் இங்கிலாந்திற்கு எதிரான ட்ரெண்ட் பிரிட்ஜில் நடந்த முதல் டெஸ்டில் இளம் விக்கெட் கீப்பர் பந்த் லெக்-ஸ்பின்னர் ஆதில் ரஷித்தை தனது இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்து தனது முதல் ஸ்கோரை பதிவு செய்தார்.


ஒரு போட்டியில் அதிக விக்கெட்கள்


ஒரு போட்டியில் அதிக விட்கெட்களை பெற்ற விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் பந்த் பெற்றுள்ளார்.   2018 ஆம் ஆண்டில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 முறை ஸ்டெம்பிற்கு பின்னால் இருந்து விக்கெட்டை எடுத்துள்ளார்.   முதல் இன்னிங்சில் 6 கேட்ச்களை எடுத்து 2 வது இன்னிங்சில் மேலும் 5  கேட்ச்களை கைப்பற்றினார், இறுதியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சாதனையின் மூலம், பந்த் ஒரு போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார்.


ALSO READ டி20 உலக கோப்பை 2021: எந்த அணியில் யார் யார் இடம் பெற்றுள்ளனர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR