இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோகனஸ்பெர்க்கில் (Johannesburg) நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3வது நாளில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.



2வது டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய அணிக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. அணியின் பேட்டிங் சிறப்பாக இருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அழைப்பு விடுத்துள்ளார்.


அவர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் மட்டுமே அரைசதம் எடுத்தனர்.


இந்திய அணியின் (Team India) தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டைத் தீர்மானிக்கும் தொடரில் 'கொஞ்சம் சிறப்பாக' பேட் செய்ய வேண்டும் என்று ஒப்புக்கொண்டார்.


இது கேப்டன் கேஎல் ராகுலின் உணர்வுகளை எதிரொலிப்பதாகவே பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 202 என்பது மிகவும் குறைவானது, மேலும் 70 ரன்கள் எடுத்திருக்கலாம் என்பதே டிராவிடின் கருத்தாகவும் இருந்தது.


ALSO READ | 2018-ல் இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்...! வரலாறு திரும்புமா?


"நேர்மையாக, நாங்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பதைப் பற்றி பெருமைப்படுகிறோம், பேட்டிங் யூனிட்டாக சிறந்து விளங்க விரும்புகிறோம்" என்று டிராவிட் போட்டியின் முடிவில் கூறினார். இந்த விளையாட்டில் சில முக்கிய தருணங்கள் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.


ஆனால் ஆடுகளம் ஒரு பேட்டிங் செய்ய எளிதானது அல்ல என்றும், ஆட்டத்தின் நான்காவது இன்னிங்ஸில், தென்னாப்பிரிக்காவால் மட்டுமே அதை கையாள முடிந்ததாகவும் டிராவிட் கூறினார்.


 “அந்த முதல் இன்னிங்ஸில் நாங்கள் 60-70 ரன்கள் அதிகமாக எடுத்திருக்கலாம். ஒருவேளை அது இந்த விளையாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம், மேலும் நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக பேட் செய்ய வேண்டும். மேலும் தொடர்ந்து முன்னேற வேண்டும்,” என்று அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.


இந்தியா தென்னாப்பிரிக்காவுடனான இந்தப் போட்டித்தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் ஒருமுறை மட்டுமே 300க்குஅதிகமாக ரன்களை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | 2nd Test: SA வெற்றி முகம்..! இந்தியாவை காப்பாற்றுவாரா வருண பகவான்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR