தமிழ் திரையுலகில் தற்போது மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாளர்கள் பட்டியலில் ஐசரி கணேஷும் ஒருவர். இவரின் வேல்ஸ் இன்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனம் பல வெற்றி திரைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில், சிம்பு நடித்து, கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் இவரின் தயாரிப்பில்தான் வெளியானது. தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவாக தயாராகி வருகிறது. 


கோமாளி, எல்கேஜி, என்னை நோக்கி பாயும் தோட்டா, பப்பி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் தயாரிப்பில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றனர். அதுமட்டுமின்றி, ஆர்.ஜே பாலாஜி நடிக்க இருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தை இந்த நிறுவனமே தயாரிக்க இருக்கிறது. சினிமாவில் மட்டுமின்றி, ஐசரி கணேஷ் விளையாட்டிலும் ஆர்வமுடையவர். இவர் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவராக உள்ளார். 


மேலும் படிக்க | T20 World Cup 2022 Final: 'சிஎஸ்கே தான் என் வெற்றிக்கு காரணம்' உலகக்கோப்பை நாயகன் சாம் கரன் பெருமிதம்!


இந்நிலையில், இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான ஐசரி கணேஷ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சுப்பிரியாவை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.


ஐசரி கணேஷ் அவர்களுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், சஞ்சய் சுப்பிரியவுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர்.


மேலும் ஐசரி கே. கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்.


மேலும் படிக்க | T20 World Cup Final : பாகிஸ்தான் தோல்வி... விராட் கோலியின் ரியாக்‌ஷன்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ