ITTF Oman Open: 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்றது இந்தியா!
ஓமனில் நடைப்பெற்று வரும் ITTF உலக ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது!
மஸ்கட்: ஓமனில் நடைப்பெற்று வரும் ITTF உலக ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது!
விராத் கோலி பவுன்டேஷன் ஆதரவில் பயிற்சிபெறும் ஸ்வஸ்திகா கோஷ் மற்றும் வருண் ஜெய்ஸ்வால் ஜோடி, சிரியாவின் சப்-ஜூனியர் பெண்கள் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
எனினும், சுல்தான் கபூஸ் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் அவர்கள் சீனா அணியிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதங்களை பெற்றனர்.
கேடட் ஆண்கள் பிரிவில், ரிஷிகேஷ் மல்ஹோத்ரா மற்றும் ஜாக் மோடி, சவுதி அரேபியா மற்றும் இந்தோனேசியா அணியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
எனினும் இறுதிப் போட்டியில் சீனாவிடம் தோல்வியுற்று, வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர்.
அதேப்போல் கேடட் பெண்கள் பிரிவு அணியில் சுஹானா சாய்னி மற்றும் அனானியா வெண்கலம் வென்றனர்.