India vs Australia, WCC Final 2023: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் (IND vs AUS Final 2023) மோதும் இறுதிப்போட்டி இன்று மதியம் தொடங்க உள்ளது. போட்டி தொடங்கும் முன் இந்திய விமானப்படையின் சூர்யகிரண் அணியின் விமான சாகசம் நடைபெறுகிறது, மேலும் போட்டிகளுக்கு நடுவே பல்வேறு பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனல் பறக்கும் இறுதிப்போட்டியைக் (ICC World Cup Final) காண 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் திரள உள்ளனர். அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி மற்றும் மொபைல் (ஓடிடி) மூலம் போட்டியை நேரலையில் காண்பார்கள். அந்த வகையில், இந்த போட்டியில் நேரலையில் ஓடிடி வியூயர்ஷிப் (Viewership) புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதிப்போட்டியை நேரலையில் ஒரே நேரத்தில் 5.4 கோடி பேர் பார்த்தனர். 


போட்டி மீது இத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி (PM Modi), உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன்கள் உள்ளிட்டோரும் இறுதிப்போட்டியை காண மைதானத்திற்கு வர அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில் கபில் தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிகிறது. பல்வேறு திரை நட்சத்திரங்கள், பிரபலங்களும் போட்டியை காண நேரில் வர வாய்ப்புள்ளது. 


மேலும் படிக்க | உலகக் கோப்பை இந்த அணிக்குதான்... அடித்துச் சொல்லும் பிரபல ஜோதிடர்


இது ஒருபுறம் இருக்க, இறுதிப்போட்டி மீதான பல்வேறு கணிப்புகளும் அனல் பறந்து வருகின்றன. அந்த வகையில், ஜோதிட கணிப்புகளும் பலராலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், இங்கு AstroTalk என்ற ஜோதிடம் சார்ந்த தளம் அதன் பயனர்களுக்கு ஒரு உற்சாகமளிக்கும் தகவலை அளித்துள்ளது. அதாவது, உலகக் கோப்பையை வென்று இந்தியா சாம்பியனானால் ரூ.100 கோடி தருவதாக அதன் சிஇஓ புனித் குப்தா தெரிவித்துள்ளார். 


LinkedIn தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில்,"கடைசியாக 2011இல் இந்தியா உலகக் கோப்பையை வென்றது, அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாகும்.


சண்டிகரில் அருகில் உள்ள கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் எனது நண்பர்கள் அனைவருடனும் போட்டியைப் பார்த்தேன். நாங்கள் அனைவரும் நாள் முழுவதும் மிகவும் பதட்டமாக இருந்தோம். இரவு முழுவதும் போட்டி குறித்த வியூகத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததால், போட்டியின் முந்தைய நாள் நாங்கள் சரியாக தூங்கவில்லை.


சிஇஓ-வின் பதிவு