இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி நேற்று முடிந்த நிலையில் இன்று மருத்துவமனையில் உள்ளது போல் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.  "not a good place to be at" என்ற வாசகத்துடன் மருத்துவமனையில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய ஜடேஜா 56,40,3,4 மற்றும் 30 ரன்கள் அடித்துள்ளார்.  மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  இங்கிலாந்து அணியில் ராபின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 


மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் புஜாரா மற்றும் விராட் கோலி சிறப்பாக விளையாடி விக்கெட்டுகள் விடாமல் தக்க வைத்தனர்.  215 ரன்களுக்கு இரண்டு விக்கெட்கள் மட்டுமே வீழ்ந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் தொடங்கி 278 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது.  இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சரியாக ஆடாதாதே, விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழுந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.  நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய உடன் புஜாரா 91 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் விராட்கோலி 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.  ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா நன்றாக விளையாடி இன்னிங்ஸ் வெற்றியை தடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களும் ரன்களை எடுக்க தவறி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.


ALSO READ முரளிதரனின் சாதனையை முறியடிப்பாரா ஆண்டர்சன்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR