Jadeja Injury: 20 ஓவர் உலகக்கோப்பையில் இருந்து ஜடேஜா விலகல்; இந்தியா பெரும் பின்னடைவு
காயம் காரணமாக ஆசியக்கோப்பையில் இருந்து விலகிய ஜடேஜா, 20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, அடுத்த போட்டியில் ஹாங்காங்கை பந்தாடியது. பாகிஸ்தான் அணியும் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இவ்விரு அணிகளும் நாளை நடக்க இருக்கும் சூப்பர் 4 சுற்றில் மோத இருக்கின்றன. இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சூப்பரான பங்களிப்பை அளித்த ஜடேஜா காயம் அடைந்துள்ளார்.
அவரின் காயம் தற்போது இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஓரிரு நாட்களில் சரியாகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஓரிரு மாதங்கள் ஓய்வெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தகவல் உறுதியானால், ஜடேஜா 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாட முடியாது. விரைவில் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக்கோப்பை நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க பல இளம் வீரர்களின் கனவாக இருக்கிறது.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணியே 20 ஓவர் உலகக்கோப்பைக்கும் தேர்வு செய்யப்படும் என்பதால், ஓரிரு இடங்கள் மட்டுமே மாற்றப்பட வேண்டிய சூழல் வரலாம் என கேப்டன் ரோகித் சர்மா உள்ளிடோர் தெரிவித்திருந்தனர். ஆனால், இந்திய அணி போட்ட கணக்குக்கு பதிலாக காயம் தலைவலியாக மாறியிருக்கிறது. ஜடேஜா விலகும் பட்சத்தில் அவருக்கு நிகரான ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் இந்திய அணிக்கு தேவை. இப்போதைக்கு அக்ஷர் படேலுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவரே 20 ஓவர் உலகக்கோப்பைக்கும் தேர்வாக வாய்ப்பிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata