இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக இருக்கும் ஜடேஜா, எட்ஜ்பஸ்ட்ன் போட்டியில் சதமடித்து பாராட்டு மழையில் நனைத்து வருகிறார். சிறப்பாக விளையாடிய அவர், 104 ரன்கள் விளாசினார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இருக்கிறது. சுவாரஸ்யமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இப்போட்டியில், ஆண்டர்சனுக்கும் ஜடேஜாவுக்கும்  இடையேயான மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரிஷப் பந்த் சதம் அடிக்கவில்லை, அது பந்துவீச்சாளர்களின் தவறு - முகமது ஆசிப்


8 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. போட்டிக்குப் பிறகு பேசிய ஆண்டர்சன், ஜடேஜாவை பாராட்டினார். 8வது இடத்தில் இறங்கிக் கொண்டிருந்த ஜடேஜாவுக்கு இப்போது 7வது இடத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால், அவர் பேட்டிங்கில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கியுள்ளார். தன்னை ஒரு பேட்ஸ்மேனாக நினைக்கத் தொடங்கியுள்ளார் என சூசகமான பேசினார். 



அவருடைய இந்த பதிலுக்கு ரிப்ளை கொடுத்துள்ள ஜடேஜா, 'ரன் அடிக்கும் போது அனைவரும் நல்ல பேட்ஸ்மேன் என்று கூறுவார்கள். ஆனால் நான் எப்போதும் கிரீஸில் நேரத்தை செலவிட விரும்புகிறேன். கிரீஸில் யார் இருந்தாலும், என் வேலையை நான் செய்கிறேன். 2014-ஐபோல் அல்லாமல் இப்போது ஆண்டர்சன் உணர்ந்து கொண்டதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என கூறினார்.


2014 என ஏன் ஜடேஜா குறிபிட்டார் என்று பார்த்தால், இருவருக்கும் இடையேயான மோதல் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. எம்.எஸ் தோனி தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் சென்றிருந்தபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நாட்டிங்ஹாமில் நடைபெற்ற போட்டியில் ஏற்பட்ட மோதலில் ஜடேஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆண்டர்சன், பற்களை உடைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். பின்னர் டிரஸ்ஸிங் ரூமிலும் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | மைதானத்தில் சண்டையிட்டு கொண்ட விராட் கோலி - ஜானி பேர்ஸ்டோவ்!


களத்தில் மோதல் ஏற்பட்டபோது தோனியிடம் ஆண்டர்சன் நடவடிக்கை குறித்து ஜடேஜா குற்றம்சாட்டினார். போட்டி நடுவரின் கவனத்துக்கும் புகாராக சென்று விசாரணை வைக்கப்பட்டது. இதில் முதலில் ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டில் இருவருக்கும் தண்டனை இல்லை என கிளீன் சிட் கொடுக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைத் தான் ஜடேஜா மறைமுகமாக குறிப்பிட்டு, ஆண்டர்சனுக்கு பதில் அளித்துள்ளார். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR