இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகியுள்ளார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.  2017-ல் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பதவி ஏற்ற ரூட் 64 டெஸ்ட் போட்டிகளில் அணியை வழிநடத்தி 27 வெற்றிகளை பெற்று தந்து உள்ளார்.  ரூட்டின் தலைமையின் கீழ், இங்கிலாந்து 2018-ல் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் வென்றது மற்றும் 2020-ல் தென்னாப்பிரிக்காவில் 3-1 வெற்றியைப் பதிவு செய்தது. 2018-ல் ரூட் 2001 க்குப் பிறகு இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இங்கிலாந்து கேப்டன் என்ற பெருமையை பெற்றார். 2021-ல் 2-0 வெற்றியுடன் மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தினார் ரூட்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சச்சின் காலில் விழுந்த பஞ்சாப் அணியின் பயிற்சியாளர்


இவ்வளவு வெற்றிகளை பெற்று இருந்தாலும், ரூட் தனது டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். சமீபத்தில், மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது ரூட்டிற்கு முக்கிய திருப்பமாக மாறியது.  பதவி விலகல் குறித்து கூறிய ரூட், "கரீபியன் சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பியதும், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இது எனது வாழ்க்கையில் நான் எடுக்க வேண்டிய மிகவும் சவாலான முடிவாகும், ஆனால் எனது குடும்பத்தினருடனும் எனக்கு நெருக்கமானவர்களுடனும் இதைப் பற்றி விவாதித்தேன்.  


எனது நாட்டிற்கு கேப்டனாக இருந்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் கடந்த ஐந்து வருடங்களை மகத்தான பெருமையுடன் திரும்பிப் பார்க்கிறேன். அந்த வேலையைச் செய்ததற்கும், இங்கிலாந்து கிரிக்கெட்டின் உச்சம் என்ன என்பதற்கு பாதுகாவலராக இருந்ததற்கும் பெருமையாக இருக்கிறது. என்னுடன் வாழ்ந்து, அன்பு மற்றும் ஆதரவின் நம்பமுடியாத தூண்களாக இருந்த எனது குடும்பத்தினர், கேரி, ஆல்ஃபிரட் மற்றும் பெல்லா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். எனது காலத்தில் எனக்கு உதவிய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார் ரூட்.



ரூட் தற்போது இங்கிலாந்தின் அதிக டெஸ்ட் ரன்களை குவித்தவர்களில் குக்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார், மேலும் அணியின் கேப்டனாக 14 சதங்கள் அடித்துள்ளார். கேப்டனாக அவர் எடுத்த 5295 ரன்கள் இங்கிலாந்து கேப்டனின் அதிகபட்சமாக உள்ளது மற்றும் கிரேம் ஸ்மித், ஆலன் பார்டர், ரிக்கி பாண்டிங் மற்றும் விராட் கோலி ஆகியோருக்குப் பின்னால் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.  தற்போது கேப்டன் பதவியில் இருந்து விலகி அணியில் ஒரு வீரராக விளையாட உள்ளார் ரூட்.


மேலும் படிக்க | தோனி செய்த அந்த மறக்க முடியாத விசயம்! நினைவிருக்கிறதா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR