தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொன்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொன்ட தொடரில் விளாயடி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கிம்பர்லீ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் மந்தனா 135 ரனகள், வேதா 51 எடுத்தனர்.


இதனையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனை லாரா வால்வார்ட், இந்தய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் பந்தில் வெளியேறினார்.


இந்த விக்கெட் ஆனது ஜூலன் கோஸ்வாமியில் 200 வது விக்கெட் ஆகும். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேற தென்னாப்பிரிக்கா அணி 124 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. இந்நிலையில் இந்தியா மகளிர் அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.


இப்போட்டியில் ஜூலன் பெற்ற 200 வது விக்கெட் மூலம், மகளிரி கிரிக்கெட்டில் 200 விக்கெட் எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையினை பெற்றுள்ளார். 



ஆண்கள் பிரிவில் முதல் 200 விக்கெட்டுகளை எடுத்த வீரரும் இந்தியரே(கபில் தேவ்) என்பது குறிப்பிடத்தக்கது!