ஐபிஎல் ஒளிபரப்பிலும் கடையை போட்ட ஜியோ! இனி இலவசமாக பார்க்கலாம்
ஐபிஎல் மினி ஏலத்தை முழுவதுமாக இலவசமாக ஒளிபரப்ப இருக்கிறது ஜியோ. இதனால், மற்ற ஒளிபரப்பு நிறுவனங்கள் இங்கேயும் வந்துட்டீங்களா மகா பிரபு என மைண்ட் வாய்ஸில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
20 ஓவர் உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட 20 ஓவர் போட்டிகளுக்கு கிரிக்கெட் உலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஐசிசி நடத்தும் போட்டிகள் எல்லாம் இப்போது சம்பிரதாயத்துக்கு மட்டுமே நடந்து கொண்டிருப்பதாக மாறிவிட்டது. ஏனென்றால், உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு கிரிக்கெட் லீக் போட்டிகள் ஐசிசி நடத்தும் போட்டிகள் மீதான ஈர்ப்பை வெகுவாக குறைத்துவிட்டன. இதற்கு அடித்தளம் இட்டதும் இந்தியா தான்.
மேலும் படிக்க | சதம் அடித்த கில்! வைரலாகும் கோலி மற்றும் கே.எல் ராகுலின் ரியாக்சன்!
ஐபிஎல் போட்டிகளை வெகு சிறப்பாக நடத்தி உலக அரங்கில் மிகப்பெரிய பிஸ்னஸ்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது இந்த தொடர். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஐரோப்பா கண்டங்களில் நடைபெறும் கால்பந்து தொடர்களுக்கு நிகரான வருமானத்தை ஐபிஎல் பெற்றுவிட்டதால் இதற்கான சந்தை மதிப்பு என்பது நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபிஎல் மீடியா ரைட்ஸூக்கு போட்டி போட்டதும், ஐபிஎல் அணிகளை வாங்க பிரபல காலபந்து அணிகள் விரும்பியதையும் உதாரணமாக சுட்டிக்காட்டலாம். அந்தளவுக்கு உலக அரங்கில் வீச்சை செலுத்தியிருக்கும் ஐபிஎல் அடுத்தாண்டு இன்னும் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது.
அதற்கான மினி ஏலம் டிசம்பர் 23 ஆம் தேதி கொச்சியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முன்னணி வீரர்கள் பலர் ஏலத்தில் பங்கேற்க இருப்பதால் இதனை காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கின்றனர். ஐபிஎல் மினி ஏலத்தை சோனி நிறுவனம் தொலைக்காட்சியிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவி ஓடிடியிலும் ஒளிபரப்ப இருக்கின்றன. இதில் தான் ஜியோ நிறுவனம் தன்னுடைய டிரேட் மார்க் இலவசத்தை அறிவித்திருக்கிறது. ஆம், ஐபிஎல் மினி ஏலத்தை இலவசமாக ஒளிபரப்ப ஜியோ நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஹாட்ஸ்டாரில் பணம் கட்டி பார்க்க வேண்டியிருக்குமே என நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி தான் இது. ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், ஜியோ டிவியை பதிவிறக்கம் செய்து இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தை லைவ்வாக பார்க்கலாம்.
மேலும் படிக்க | 15 ரன்களில் ஆல் அவுட்! RCB-க்கே டப் கொடுத்த அணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ