இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பெர்க்கில் (Johannesburg) நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3வது நாளில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா - சிக்கலில் பிக்பாஸ் T20 லீக்?


இதனால், தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 240 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 3வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்களை எடுத்துள்ளது. மார்க்ரான் 31 ரன்களுக்கும், பீட்டர்சன் 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். டீன் எல்கர் 46 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருக்கு பக்கபலமாக வாண்டர் டசன் 11 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.


ALSO READ | WTC Table: டாப் 5-ல் வங்கதேசம், SA -ன் பரிதாபநிலை..! அப்போ இந்தியா?


 தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற வேண்டும் என்றால் இன்னும் 118 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன. இப்போதைய சூழலில் தென்னாப்பிரிக்கா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே வெற்றியை வசப்படுத்திவிட முடியும். அதேநேரத்தில், திடீரென பெய்து வரும் மழை காரணமாக பிட்சில் ஈரப்பதம் ஏற்பட்டு, அது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும் மாற வாய்ப்புள்ளது. அப்படி மாறினால் மட்டுமே இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு என்பதை நினைத்து பார்க்க முடியும். இல்லையென்றால் தோல்வியை தவிர்க்க முடியாது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR