ஆஸ்திரேலியாவில் பிக்பாஸ் லீக் 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மெல்பேர்ன் ஸ்டார்ஸூக்காக விளையாடி வரும் கிளென் மேக்ஸ்வேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி உறுதி செய்துள்ளது. மெல்பேர்ன் ரெனிகேடஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு, ஓய்வறைக்கு சென்ற அவருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளது.
ALSO READ | WTC Table: டாப் 5-ல் வங்கதேசம், SA -ன் பரிதாபநிலை..! அப்போ இந்தியா?
உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அந்த டெஸ்டில் பாசிடிவ் என ரிசலட் வந்ததையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஏற்கனவே 12 வீரர்கள் மற்றும் அணி உதவியாளர்கள் 8 பேர் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் மேக்ஸ்வெல்.
மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் மேக்ஸ்வெல், தொடரின் பாதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் அந்த அணிக்கு ஒரு நல்ல செய்தியும் கிடைத்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆடம் ஜம்பா, கூல்டர் நைல் மற்றும் மார்க்ஸ் ஸ்டொயினஸ் ஆகியோர் அடுத்த போட்டிக்கு அணிக்கு திரும்ப உள்ளனர். இதனிடையே, பிரிஸ்பேன் அணி வீரர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பிக்பாஷ் இருபது ஓவர் தொடர் தொடர்ந்து நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR