தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா, ஐசிசி விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா (Kagiso Rabada). இவர் 1995-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி பிறந்தார்.


இவர் 2014-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மூலம் அறிமுகம் ஆனார்.


இவர் 2015-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற வங்காளதேசத்திற்கு எதிரான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார்.


இவர் 2015-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி நடைபெற்ற  இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார்.


ஜனவரி 2017 ஐசிசியின் சிறந்த பந்து வீச்சுத் தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றார்.



இதுவரை 27 டெஸ்ட் போட்டியில் விளையாடி 124 விக்கெட்களை எடுத்துள்ளார். அதேபோல 50 ஓவர் கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டும், 16 டி-20 போட்டியில் விளையாடி 22 விக்கெட்களை எடுத்துள்ளார்.


விளையாட்டு உலகில் இளம் கிரிக்கெட் வீரர் என்ற புகழை பெற்றுள்ளார். ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் பரிசு உட்பட மொத்தம் ஆறு விருதுகளை பெற்ற முதல் தென் ஆப்பரிக்க கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.



ஆனால் தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு வரும் காகிசோ ரபாடா, ஐசிசி விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.