கோப்பை பயணத்தில், கேன் வில்லியம்சன் படைத்த புதிய சாதனை!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் நடப்பு உலக கோப்பை தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சன் நடப்பு உலக கோப்பை தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்!
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி பந்து வீசி வருகிறது.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 30 ரன்கள் குவித்து வெளியேறினார். இதன் மூலம் நடப்பு தொடரில் வில்லியம்சன் 578 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் கேன் வில்லியம்சன் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது, உலகக் கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார். 9 இன்னிங்ஸ்களில் 578 ரன்களை கடந்து இலங்கையின் ஜெயவர்தனே சாதனையை வில்லியம்சன் முறியடித்தார்.
ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள்
வில்லியம்சன் -578 (2019)
ஜெயவர்த்தனே -548 (2007)
ரிக்கி பாண்டிங் -539 (2007)
ஆரோன் பிஞ்ச் -507 (2019)