பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆரம்பாகியுள்ளது. டிசம்பர் 18 ஆம் தேதி வரை இப்போட்டி கத்தாரில் நடக்கிறது. மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவுக்கு இதுவே கடைசி கால்பந்து உலக கோப்பை என்பதால், உலகம் முழுவதும் இருக்கும் கால்பந்து ரசிகர்கள் அவர்களின் ஆட்டத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | FIFA World Cup 2022 : எலான் மஸ்கின் போட்ட ஸ்வீட்டான ட்வீட்...


இந்தியாவை பொறுத்த வரை மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் எப்போதும் கால்பந்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கால்பந்து உலக கோப்பை நடைபெற இருப்பதால், இரு மாநிலகளிலும் கால்பந்து ஜொரம் அதீதமாக இருக்கிறது. கேரளாவில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகிய வீரர்களின் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு கட் அவுட்டுகளை வைத்து அசத்தியுள்ளனர். சில ரசிகர்கள் தங்களின் வீடுகளுக்கே விரும்பும் அணிகளின் கலரை பெயிண்டாக அடித்துள்ளனர். உதாரணமாக, பிரேசில் என்றால் மஞ்சள் நிறமும், அர்ஜெண்டினா என்றால் வெள்ளை நீலமும் அடித்துள்ளனர். 


இதனையெல்லாம் விட, 17 நண்பர்கள் சேர்ந்து கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக வீடு ஒன்றையே வாங்கியிருக்கின்றனர். மிகத் தீவிரமான கால்பந்து ரசிகர்களாக அவர்கள், கிளப் போட்டிகளைக் கூட எப்போதும் ஒன்றாக பார்க்கக்கூடியவர்கள். இப்போது, உலக கோப்பை நடைபெறுவதால்,ஒன்றாக இணைந்து பார்க்க வேண்டும் என்பதற்காக 23 லட்சம் ரூபாய்க்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். அந்த வீட்டில் கால்பந்து அணிகளின் கலர்களை பெயிண்டாக அடித்துள்ளனர். மெஸ்ஸி, நெய்மர், ரொனால்டோ ஆகியோரின் பேனர்களை சுற்றி வைத்து அசத்தியுள்ளனர்.


மேலும் படிக்க | FIFA World Cup 2022 : கால்பந்து உலகக்கோப்பையை எதில், எப்படி பார்ப்பது?