உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை கத்தார் நாட்டில் நாளை தொடங்கிறது. 32 அணிகள் பங்கேற்க உள்ள இத்தொடரின் முதல் சுற்றில், எட்டு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒரு குழுவில் மொத்தம் 4 அணிகள் இருக்கும். ஒரு அணி தனது குழுவில் இருக்கும் அணிகளோடு தலா 1 முறை மோதும். பின்னர் புள்ளிப்பட்டியலின்படி, குழுக்களில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அந்த சுற்றுக்கு மொத்தம் 16 அணிகள் தேர்வாகும். அதில், குழுக்கள் முறையில் போட்டிகள் முடிவு செய்யப்பட்டு, நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும்.
அதன்பிறகு, காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என டிசம்பர் 23ஆம் தேதிவரை கால்பந்து ரசிகர்களுக்கு திருவிழா நீண்டு இருக்கிறது. ஃபிஃபா உலகக்கோப்பை தொடர் முதன்முதலாக, மத்திய கிழக்கு நாட்டிலும், ஆசியாவில் இரண்டாவது முறையாகவும் நடைபெறுகிறது. 2002ஆம் ஆண்டில், ஜப்பான், தென்கொரியா நாடுகள் உலகக்கோப்பையை நடத்தியது.
மேலும் படிக்க | FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான பரிசுத்தொகை அதிரடி அதிகரிப்பு
ட்விட்டர் பணியாளர்களின் அதிருப்தி, ப்ளூ டிக் செயல்பாடு, நிறுவனத்தின் மறுகட்டமைப்பு என எலான் மஸ்க் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அவர் இன்று அதிகாலை பதிவிட்டுள்ள ட்வீட்டில்,"ஞாயிற்றுக்கிழமை உலகக்கோப்பையின் முதல் போட்டி இருக்கிறது. அதன் முழு கவரேஜ் மற்றும் சிறந்த வர்ணனை ட்விட்டரில் கிடைக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
First World Cup match on Sunday! Watch on Twitter for best coverage & real-time commentary.
— Elon Musk (@elonmusk) November 18, 2022
ஆனால், எலான் மஸ்க் ஃபிஃபா உலகக்கோப்பையை ட்வீட்டில் எங்குமே குறிப்பிடவில்லை. வரும் 20ஆம் தேதி, ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை மட்டுமே உள்ளதால், அதுவாகதான் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் போன்ற அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, ட்விட்டரால் அங்கீகரிக்கப்படும் பயனர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் (Blue Tick) நடைமுறை அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், அதற்கு எட்டு அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு, அந்நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை எலான் மஸ்க் முடுக்கிவிட்டார். இதனால், கடந்த நவ.4ஆம் தேதி அன்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் ட்விட்டர் பணியாளர்கள் தங்களின் வேலையை இழந்தனர். தொடர்ந்து, நிரந்தர ஊழியர்கள் மட்டுமின்றி, சுமார் 4,400 ஒப்பந்த பணியாளர்களையும் அவர் பணியில் இருந்து நீக்கியதாக அறிவிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து ட்விட்டர் ஊழியர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிகிறது.
உலகக்கோப்பையின் முதல் போட்டியில், தொடரை நடத்தும் கத்தார், ஈக்வடார் அணியுடன் மோதுகிறது. ரொனால்டோ, மெஸ்ஸி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை தொடராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியாவின் வீழ்ச்சிக்கு இவர்கள்தான் காரணமா? - தேர்வுக்குழுவை தூக்கியடித்த பிசிசிஐ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ