KKR vs MI: சிக்சரில் இரட்டை சதம் அடித்த ரோஹித் சர்மா; 49 ரன்கள் வித்தியாசத்தில் MI வெற்றி
ஐ.பி.எல்லில் (IPL 2020) சிக்சர்களில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த வரிசையில் முதல் இடம் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) பெயரில் உள்ளது.
IPL 2020, KKR vs MI: இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சிக்சர்களில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ரோஹித் சர்மா (Rohit Sharma) பெற்றார். 2020 செப்டம்பர் 23 நேற்று (புதன்கிழமை) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான (KKR) போட்டியில் 54 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அப்பொழுது அவர் 6 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளை அடித்தார். ஆறாவது சிக்ஸரை அடித்தவுடன் அவர் சிக்ஸர்களில் இரட்டை சதத்தை நிறைவு செய்தார். ஐ.பி.எல்லில் சிக்சர்களில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த வரிசையில் முதல் இடம் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) பெயரில் உள்ளது. ஐபிஎல் போட்டியின் 192 போட்டிகளில் தோனி 212 சிக்சர்களை அடித்துள்ளார்.
2020 ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் ரோஹித் தவிர, சூரியகுமார் யாதவும் (Suryakumar Yadav) ஒரு சாதனை படைத்தார். இந்த போட்டியில் அவர் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அவர் தனது 47 வது ரன் எடுத்ததும், ஐ.பி.எல். இல் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்காக 1000 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் வரிசையில் இடம் பிடித்தார். சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar), அம்பதி ராயுடு, ரோஹித் சர்மா, பில் சிம்மன்ஸ், கீரோன் பொல்லார்ட் மற்றும் ஹார்திக் பாண்ட்யா ஆகியோருக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 1000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த 7 வது பேட்ஸ்மேன் ஆனார். அவர் தனது 32 வது இன்னிங்சில் இந்த சாதனையை அடைந்தார். மிகக் குறைந்த இன்னிங்ஸில் இந்த நிலையை எட்டிய மூன்றாவது பேட்ஸ்மேன் ஆவார்.
ALSO READ | IPL இல் சிறந்த சாதனைகளை படைத்த இந்த வீரர்களும் அணிகளும்....யார் அவர்கள்?
ஐ.பி.எல். தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் யார் தெரியுமா?
கிறிஸ் கெயில் (Chris Gayle) இதுவரை ஐபிஎல்லில் 125 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் 326 சிக்சர்களை அடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல் தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாபின் ஒரு பகுதியாக உள்ளார். இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் (AB de Villiers) உள்ளார். டிவில்லியர்ஸ் 155 போட்டிகளில் 214 சிக்ஸர்களை அடித்துள்ளார். ரோஹித் தவிர, சுரேஷ் ரெய்னாவும் சிக்ஸர்களில் இரட்டை சதம் அடித்த இந்தியராக முடியும், ஆனால் தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்த முழு சீசனில் இருந்து வெளியேறியுள்ளார். சுரேஷ் ரெய்னா 193 போட்டிகளில் 194 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
ALSO READ | IPL 2020: MI அணியில் சேர்ந்துவிட்டாரா Sachin-ன் மகன் Arjun Tendulkar?
இந்த போட்டியில், ரோஹித் சர்மா மற்றொரு தனிப்பட்ட சாதனையை படைத்தார். ஐ.பி.எல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இப்போது அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்கு எதிராக 904 ரன்கள் எடுத்துள்ளார். அவர் டேவிட் வார்னரின் (David Warner) சாதனையை முறியடித்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் 829 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வரிசையில் விராட் கோலி மூன்றாம் இடத்தில் உள்ளார். டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிராக விராட் கோலி (Virat Kohli) 825 ரன்கள் எடுத்துள்ளார்.