இந்திய கிரிக்கெட்டின் கடவுளாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) மகன் அர்ஜுன் டெண்டுல்கர், UAE-யிலிருந்து ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். இதற்குப் பிறகு அவர் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியில் சேர்ந்து விட்டாரோ என்ற ஊகங்கள் தீயாய் பரவத் தொடங்கின. அணியின் ஓய்வு நாளில், ட்ரெண்ட் போல்ட், ஜேம்ஸ் பாட்டின்சன் மற்றும் பிற MI வீரர்களுடன் அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar) நேரத்தை வேடிக்கையாக செலவழிப்பதை படத்தில் காண முடிகிறது. அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் IPL 2020 ஏலத்தில் வரவில்லை என்பதால், இந்த படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கர் MI முகாமில் காணப்படுவது இது முதல் தடவையல்ல என்றாலும், இந்த முறை இந்தியாவில் போட்டிகள் நடைபெறவில்லை என்பதால், பல ரசிகர்கள் அவர் அந்த அணியில் சேர்ந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அர்ஜுன் டெண்டுல்கர் (Arjun Tendulkar) MI-ல் சேர்ந்து விட்டாரா? இல்லை. ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான MI அணியில் அர்ஜுன் சேரவில்லை. நெட் பந்து வீச்சாளர்களின் குழுவில் ஒருவராக அவர் UAE-க்கு பயணம் செய்துள்ளார். ஒவ்வொரு IPL அணியும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நெட் பந்து வீச்சாளர்களை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளது. அந்த வகையில் அர்ஜுன் டெண்டுல்கர், MI வீரர்களுக்கு நெட் பயிற்சியின் போது பந்து வீசுவார்.
20 வயதான அவர் இந்திய அணி வீரர்களுக்கு இவ்வாறு ஓரிரு சந்தர்ப்பங்களில் பந்து வீசியுள்ளார். மேலும் MI-ன் நெட் பயிற்சிகளிலும் இவர் அவ்வப்போது காணப்படுவது வழக்கம்தான்.
2017 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக டெண்டுல்கர் இந்திய மகளிர் அணிக்கு நெட் பயிற்சியில் பந்து வீசினார். அதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அவர் போட்ட யார்கரால் காயமடைந்த ஜானி பேர்ஸ்டோவால் அந்த முழு போட்டிகளிலும் விளையாட முடியவில்லை.
ALSO READ: IPL 2020: CSK வீரர் Ruturaj Gaikwad-க்கு மீண்டும் COVID, மீண்டும் quarantine!!
அவரது தந்தையைப் போலல்லாமல், அர்ஜுன் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர். மேலும் அவர் ஓரளவிற்கு நன்றாக பேட்டிங்கும் செய்யக்கூடியவர். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) தான் விளையாடியபோது, மிகச்சிறந்த முதன்மை பேட்ஸ்மேனாக இருந்த போதிலும், அவ்வப்போது பந்து வீச்சாளராகவும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Our #Master Blaster SACHIN TENDULKAR's SON -
ARJUN TENDULKAR in #MI Camp.Left Arm Seamer
All-rounder #MumbaiIndians #OneFamily pic.twitter.com/eiBDDLpVCw
— பேட்டைக்காரன் (@Bigil99) September 14, 2020
அர்ஜுன் மும்பை இந்தியன்ஸில் சேர முடியுமா?
ஆம். வீரர்கள் யாராவது போட்டிகளில் இருந்து விலகிவிட்டால் MI அவருடன் ஒப்பந்தம் இடலாம். அவர் ஏலத்தின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் SOP கள் மற்றும் விதிகளின் படி, அணி உரிமையாளர்கள் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உள்ள வீரர்களின் தொகுப்பிலிருந்து மற்றொரு வீரரை தேர்ந்தெடுக்கும் அனுமதியை BCCI வழங்கியுள்ளது. சீனியர் அணியில் இன்னும் இடம் பெறாத அர்ஜுன், 2018 ல் இந்தியா U-19 அணியில் இடம் பெற்றிருந்தார்.
UAE-ல் தொடங்கவிருக்கும் IPL 2020 -ன் முதல் ஆட்டத்தில் மும்பை இந்திய்னஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியை எதிர்த்து விளையாடும். இந்த துவக்க ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருகிறார்கள்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR