கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி சொன்ன ’குட்டி’ ஹேப்பி நியூஸ்!
KL Rahul Athiya Shetty | இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி குறித்து ‘குட்டி’ குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.
KL Rahul Athiya Shetty | இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்திருக்கின்றனர். அடுத்த ஆண்டு அவர்கள் வீட்டிற்கு புதிய வரவு இருக்கப்போகிறது என தெரிவித்துள்ளனர். அதாவது அதியா ஷெட்டி கர்ப்பமாக இருப்பதாகவும், தாங்கள் இருவரும் மகிழ்ச்சியோடு முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேஎல் ராகுல் -அதியா ஷெட்டி தெரிவித்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த நட்சத்திர தம்பதிகள் இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அதியா ஷெட்டி, கேஎல் ராகுல் இருவரும் 2019 ஆம் ஆண்டு முதல் காதலிக்க தொடங்கினர். பிரபல நடிகரான சுனில் ஷெட்டியின் மகள் தான் அதியா ஷெட்டி.
மேலும் படிக்க | தம்பியை போலவே கலக்கும் அண்ணன்... ரஞ்சியில் தேஜஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி!
நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்கும்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். 2023 ஆம் ஆண்டு சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நெருங்கிய உறவினர்கள் புடைசூழ கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர், சில மாதங்களிலேயே அதியா ஷெட்டி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் சுனில் ஷெட்டி அதனை மறுத்திருந்தார். ஆனால் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுனில் ஷெட்டி, சூசகமாக தான் தாத்தாவாக போவது குறித்து கூறியிருந்தார். அப்போதே யூகங்கள் கிளம்பினாலும், இப்போது அதனை அதிகாரப்பூர்வமாக கேஎல் ராகுல் அதியா ஷெட்டி அறிவித்துள்ளனர்.
கேஎல் ராகுல் இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இந்திய ஏ அணிக்காக அவர் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் அவர், மிக முக்கியமான இந்த தொடரில் சிறப்பாக ஆட வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே ஆஸ்திரேலியா சென்று பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடும் இந்திய ஏ அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். இரண்டு இன்னிங்ஸிலும் ஓப்பனிங் இறங்கிய ராகுல், எதிர்பாராதவிதமாக அவுட்டானார்.
இருப்பினும் இது பயிற்சி தான். பார்டர் கவாஸ்கர் டிராபி தொடங்குவதற்கு முன்பு தன்னுடைய முழு பார்முக்கு திரும்பும் முனைப்பில் இருக்கிறார் அவர். அதற்காக அவர் ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியும் செய்து கொண்டிருக்கிறார். இப்போது தன்னுடைய முதல் குழந்தையை அவர் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான செய்தியையும் வெளியிட்டிருப்பதால், இனி வரும் நாட்களில் ராகுல் சிறப்பாகவே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ