பெண்களுக்கு எதிரான கருத்து: பாண்டியா, ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராத விதித்த BCCI
பெண்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் இருவருக்கும் பிசிசிஐ தலா ரூ.20 லட்சம் அபராதத்தை விதித்துள்ளது.
பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் "காஃபி வித் கரண்" நிகழ்ச்சியில் கடந்த சனவரி மாதம் ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் கலந்துக்கொண்டனர். அதில் கேட்டக்கப்பட்ட சில கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர். அப்பொழுது பெண்களை பற்றி சில கேள்விக்கு பதில் அளித்தார் ஹர்திக் பாண்டியா. இவரின் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்தது. பலர் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைதளத்தில் ஹார்திக் பாண்டியாவுக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் மீது விமர்சனங்கள் வைக்கப்படவில்லை.
இதனையடுத்து, தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் ஹர்திக் பாண்டியா. மேலும் என் பேச்சால் மனவருத்தம் அடைந்தவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அந்நிகழ்ச்சியின் தன்மையினால் அவ்வாறு பேசிவிட்டேன். யாரையும் அவமரியாதை செய்யவோ அல்லது யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதோ என் நோக்கமல்ல என்று விளக்கம் அளித்தார் ஹர்திக் பாண்டியா. இதனையடுத்து இருவருக்கும் சில போட்டிகளில் விளையாட தடை விதித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்தநிலையில், ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் இருவருக்கும் பிசிசிஐ தலா ரூ.20 லட்சம் அபராதத்தை விதித்துள்ளது. அதில் உயிரிழந்த 10 துணை ராணுவப்படை வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்க வேண்டும் என்றும், பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக மீதமுள்ள ரூ.10 லட்சத்தை அளிக்க வேண்டும் என்றும் இருவருக்கும் பிசிசிஐ உத்தரவுட்டுள்ளது.