IND vs AUS, 1st ODI: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிரட்டிய மார்ஷ்


தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்த நிலையில், மிட்செல் மார்ஷ் - ஸ்டீவ் ஸ்மித் பார்ட்னர்ஷிப் சற்று ரன்களை பெற்று தந்தது. இந்த ஜோடி 72 ரன்களை எடுத்த போது, ஸ்மித் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, அரைசதம் கடந்து சதத்தை தொட பாய்ந்துகொண்டிருந்த மார்ஷின் விக்கெட்டை, ஜடேஜா கைப்பற்றினார். அவர் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 65 பந்துகளில் 81 ரன்களை அவர் குவித்தார். 


ஷமி ஹீராடா...


ஆனால், அவருக்கு அடித்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக்கட்ட ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி அளிக்கும் வகையில், 188 ரன்களுக்கு ஆல்-அவுட்டனாது. முக்கியமாக, ஷமி தனது அபாரா பந்துவீச்சால் ஜாஷ் இங்லிஸ், கேம்ரூன் க்ரீன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் என முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணி தரப்பில் ஷமி, சிராஜ் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 


மேலும் படிக்க | IPL 2023: தோனிக்கு 41 வயது நிஜமா? பைசெப்களுடன் பயிற்சி எடுக்கும் தல


ஸ்டார்க் வெறியாட்டம்


189 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கினாலும், ஆஸ்திரேலியா கடுமையாக போட்டியிட்டது. குறிப்பாக, மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் இந்திய அணியின் டாப்-ஆர்டர் முழுவதுமாக நிலைக்குழைந்தது. இஷான் கிஷானை மட்டும் ஸ்டாய்னிஸ் வெளியேற்றிய நிலையில், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை ஸ்டார்க் பெவிலியனுக்கு அனுப்பினார். 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்தியா கைப்பற்றியது. 



காப்பாற்றி கேஎல் ராகுல்


பின்னர், கேஎல் ராகுலுடன், கேப்டன் பாண்டியா சிறிய பார்டனர்ஷிப்பை அமைத்தார். பாண்டியா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஜோடி சேர்ந்த ராகுல், ஜடேஜா பொறுப்புடன் நிதானமாக விளையாடியது. இந்த ஜோடி இறுதிவரை நிலைத்துநின்று இந்திய அணியின் வெற்றியை உறுதிசெய்தது. இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 



அடுத்த போட்டி


கேஎல் ராகுல் 75 ரன்களுடனும், ஜடேஜா 45 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 3, ஸ்டாய்னிஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேலும், ஆட்டநாயகன் விருதை ஜடேஜா கைப்பற்றினார். அடுத்த ஒருநாள் போட்டி, ஆந்திராவின் கடப்பாவில் உள்ள ஒய்.எஸ். ராஜா ரெட்டி மைதானத்தில் நாளை மறுதினம் (மார்ச் 19) நடைபெற உள்ளது.



மேலும் படிக்க | புதுப்பொலிவுடன் சேப்பாக்கம் மைதானம்... கருணாநிதி பெயரில் கேலரியை திறந்துவைத்தார் ஸ்டாலின்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ