2-வது t20; டாஸ் வென்ற ஆஸித்திரேலியா பந்துவீச்சு தேர்வு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது!
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. முன்னதாக கடந்த பிப்., 24-ஆம் நாள் நடைப்பெற்ற முதல் 20 ஓவர் கிரிகெட் போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது 20 ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா முதல் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைப்பெறும் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை வெல்லும். எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்தியா தீவிர பயிற்சி பெற்று களம் காணுகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடுகிறது. இந்தியா தரப்பில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் மற்றும் சிகர் தவான் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி 6 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் குவித்துள்ளது. ராகுல் 41(21) மற்றும் சிகர் தவான் 9(15) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.