பார்முக்கு திரும்ப கே.எல்.ராகுல் எடுத்த அதிரடி முடிவு
20 ஓவர் உலக கோப்பையில் மோசமான ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுல் மீண்டும் பார்முக்கு திரும்ப அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
ராகுலின் மோசமான பார்ம்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பெற்றாலும், தொடக்க வீரர் கே.எல்.ராகுலின் ஆட்டம் கவலைக்குறியதாகவே இருக்கிறது. மோசமான பார்ம் காரணமாக பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் மோசமான பார்மில் ஆடி வரும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கி வருவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் படிக்க | T20 world cup: உலக கோப்பை இந்திய அணியில் இருக்கும் வீரருக்கு ஷாக் கொடுத்த ஐபிஎல் அணி
ரிஷப் பன்டுக்கு வாய்ப்பு
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் பார்ம் இல்லாமல் இருக்கும் ராகுலை நீக்கிவிட்டு, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்டுக்கு ஓபன்னிங் இறங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அடுத்த போட்டியிலும் அவர் சொதப்பினால், அது இந்திய அணியின் வெற்றி தோல்விக்கு மிகப்பெரிய பாதமாக இருக்கும் என்பதால், தென்னாப்பிரிக்கா போட்டியிலேயே கே.எல்.ராகுலை நீக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
அனில் கும்பிளே கருத்து
கே.எல்.ராகுல் குறித்து ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். "பவர் பிளேவில் கே.எல்.ராகுல் மிகவும் சிறப்பாக விளையாடக்கூடியவர். ஆனால் ஐபிஎல் போட்டியில் மொத்த அணியும் அவரை சார்ந்திருந்ததால் ராகுல் மெதுவான பேட்டிங் ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இந்திய அணியில் அப்படியான நெருக்கடிகள் அவருக்கு இல்லை என்பதால் அதிரடியாக விளையாடலாம். அணி நிர்வாகமும் ராகுலிடம் அதையே எதிர்பார்க்கும் நிலையில், ஏன் மெதுவாக விளையாட வேண்டும்" என கும்பிளே கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் எடுத்த முடிவு
தன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருப்பதை உணர்ந்திருக்கும் கே.எல்.ராகுல், இந்திய அணியின் மனநல ஆலோசகர் பாடி அப்டனின் உதவியை நாடியிருக்கிறார். விராட் கோலியும் பார்ம் இல்லாமல் இருந்தபோது பாடி அப்டன் உதவி செய்த நிலையில், அதே வழியை பின்பற்றியிருக்கிறார் ராகுல். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அவர். ரசிகர்களும் அவருடைய சிறப்பான ஆட்டத்தை காண காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | ICC T20 World Cup : சிட்னியில் மழை... இந்தியாவின் வெற்றி பயணம் தடைபடுமா...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ