கேஎல் ராகுல் சதம், இந்தியா 245 ரன்களுக்கு ஆல்அவுட் - இன்னிங்ஸை தொடங்கிய தெ.ஆ
செஞ்சூரியரில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் சதம் விளாசி அவுட்டானர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. சிறப்பாக ஆடிய கே.எல் ராகுல் சதமடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவரின் பொறுப்பான ஆட்டம் இந்திய அணி கவுரமான ரன்களை இந்த டெஸ்டில் எடுக்க உதவியது. தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிராக இப்போது டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கியது.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்தது போல் ஆடவில்லை. கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களுக்கும், சுப்மான் கில் 2 ரன்களுக்கும் அவுட்டாக ஓப்பனிங் இறங்கிய மற்றொரு வீரர் ஜெய்ஷ்வால் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
டாப் ஆர்டர்கள் 3 பேரும் மிக குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியஅணி சிக்கலில் இருந்தது. அதனால் மிடில் ஆர்டரில் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கோலி 38 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த கே.எல்.ராகுல் நங்கூரம் போல் நிலைத்து நின்று கொண்டார்.
சிறப்பாக ஆடிய அவர் சதமடித்தார். செஞ்சூரியன் மைதானத்தில் ராகுல் அடிக்கும் 2வது செஞ்சூரி இதுவாகும். கடைசி கட்ட வீரர்களில் தாக்கூர் மட்டுமே 24 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.
101 ரன்கள் எடுத்திருந்தபோது கடைசி விக்கெட்டாக கே.எல். ராகுல் அவுட்டானார். அவர் 89 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து சதமடித்தார். ராகுல் விக்கெட்டை தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர் நந்த்ரே பர்கர் வீழ்த்தினார். முடிவில் இந்திய 245 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
மேலும் படிக்க | இந்திய அணியில் இருக்கும் முக்கிய பிரச்னை... அடுத்த போட்டியில் என்ன செய்யலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ