கோலிக்கு முன்னாள் வீரர்கள் சப்போர்ட்... அப்செட்டில் ராகுல்
இந்திய அணியின் தொடக்க வீரராக கோலி களமிறங்கலாம் என முன்னாள் வீரர்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றிருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்தது. குரூப் சுற்றில் பாகிஸ்தானையும், ஹாங்காங்கையும் வீழ்த்தி கம்பீரமாக சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா முன்னேறியது.
ஆனால் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடமும், இலங்கையிடமும் இந்தியா தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்த ஆசிய கோப்பையில் ரசிகர்களுக்கான ஒரே ஆறுதல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது மட்டும்தான்.
அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கே.எல். ராகுலுடன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி முன்கூட்டியே இறங்கினாலும் சதம் அடித்ததால் கோலியே தொடக்க ஆட்டக்காரராக டி20 உலகக்கோப்பையில் களமிறங்கலாம் என பரவலான ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவுடன் டி20 உலகக்கோப்பையில் களமிறங்கலாம் என முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கரும், ஹர்பஜன் சிங்கும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், “கோலியை தொடக்க வீரராக இறக்குவது நல்ல திட்டம்தான். ஆனால் அதற்கு ராகுல் ஒப்புக்கொள்வாரா என்று தெரியவில்லை. ஓபனிங்கில் கோலி ஆடிய விதம், பயிற்சியாளர், கேப்டன், தேர்வுக்குழுவிற்கு கூடுதல் ஆப்ஷனை வழங்கியுள்ளது” என்றார்.
அதெபோல், ஹர்பஜன் சிங் பேசுகையில், “ஐபிஎல்லிலும் பெங்களூரு அணிக்காக ஓபனிங்கில் இறங்கி விளையாடியிருக்கிறார் கோலி. சொல்லப்போனால் ஓபனிங்கில் அவர் நன்றாக ஆடவும் செய்திருக்கிறார். ஓபனிங்கில் ஆடி ஒரு சீசனில் 921 ரன்களை குவித்திருக்கிறார். எனவே ஓபனிங் ஒன்றும் கோலிக்கு புதிதல்ல. அவருக்கு பிடித்தமான பேட்டிங் ஆர்டர். எனவே ரோஹித் - கோலி தொடக்க வீரர்களாக இறங்கிக்கொண்டு, ராகுலை மூன்றாவது ஆட்டக்காரராக இறக்கலாம்” என கூறினார்.
மேலும் படிக்க | அப்போ... நான் வெளிய உட்காரவா...' - கோலி சதத்திற்கு பின் கொந்தளித்த கேஎல் ராகுல்!
முன்னதாக, ஆப்கானிஸ்தானுடனான போட்டி முடிந்த பிறகு கே.எல். ராகுல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியை எடுத்துக்கொண்டாலும் சரி, ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அவர் விளையாடியதை எடுத்துக்கொண்டாலும் சரி, ஓப்பனராக இறங்கும்போதுதான் விராட் கோலி சிறப்பாக விளையாடுகிறாரோ?' என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு ராகுல், "அப்படி என்றால், நான் வெளியே உட்கார வேண்டுமா.
விராட் கோலியை உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும், ஓப்பனிங் இறங்கினால்தான் அவர் சதம் அடிப்பாரா என்ன? மூன்றாவது வீரராக இறங்கினாலும், அவர் சதம் அடிப்பார். இவையனைத்தும் அணியில் ஒரு வீரரின் பங்கு என்ன என்பதை பொறுத்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விராட் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தார். அடுத்த தொடரிலும் அவர் விளையாடுவார். அதில் அவரின் பங்கு என்பது வேறாக இருக்கும்” என பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ