கோலி மீது காதல் கொண்ட பாகிஸ்தான் ஆண் காவலர்!
உலக XI அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையே அண்மையில் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி தொடர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி அபாரமாக 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இந்த வகையில் பாகிஸ்தான் ஆண் காவலர் ஒருவர் கோலி என்னை திருமணம் செய்து கொள் என்ற போஸ்டரை கையில் ஏந்தி போஸ் கொடுத்திருந்தார். இந்த போஸ்டர் தற்போது சமுக வலைதளத்தில் தற்போது வைரலாகி உள்ளது.
முன்னதாக பாகிஸ்தானை சேர்ந்த பெண் ரசிகர்கள் பலர் கோலி என்னை திருமணம் செய்து கொள் என கையில் போஸ்டருடன் வந்திருந்தனர்.