மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டி நடைபெற்றது. கொல்கத்தா நைட்ரைடரஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வெற்றி பெற்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி, அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தி விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தனர். இதனால் பெரிய ஸ்கோர் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மொயின் அலியால் சிஎஸ்கே-வில் பறிபோன நியூசிலாந்து வீரரின் வாய்ப்பு


தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு ரன்னில் அவுட்டான நிலையில், மறுமுனையில் இருந்த தவான் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒன் டவுன் களமிறங்கிய ராஜபக்சா, கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். 9 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 31 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை விளாசியிருந்தார்.



அவருக்கு பின் களமிறங்கிய மற்ற வீரர்கள் யாரும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. கடைசி வரிசையில் களமிறங்கிய ரபாடா, 16 பந்துகளில் 25 ரன்கள் விளாச, பஞ்சாப் அணி கவுரமான ஸ்கோரை எட்டியது. பேட்டிங் பிட்ச் என்பதால் 137 ரன்களை எளிதாக எட்டிவிடலாம் என கொல்கத்தா அணி சேஸிங்கை தொடர்ந்தது. 



அவர்களும் தொடகத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து சிறியளவில் தடுமாற்றத்தை எதிர்கொண்டனர். ரஹானே 12 ரன்களுக்கும், வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்ததாக களம் புகுந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 15 பந்துகளில் 26 ரன்கள் விளாசி அவுட்டானார். இவருக்கு அடுத்தபடியாக களம் புகுந்த நிதீஷ் ராணா டக் டவுட்டாக, ரஸ்ஸல் களமிறங்கி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சுக்கு நூறாக நொறுக்கினார்.



திரும்பிய திசைகளிலெல்லாம் சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளாக விளாசி பஞ்சாப் அணியை கதற வைத்தார். 31 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 70 ரன்களை விளாசினார். இதில் 8 மெகா சிக்சர்களும், 2 பவுண்டரிகளையும் அடித்தார். ஒடியன் ஸ்மித் ஓவரில் மட்டும் 31 ரன்களை ரஸ்ஸல் மற்றும் பில்லிங்ஸ் சேர்த்தனர். கடைசியாக கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ஐபிஎல் 2022-ல் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்துக்கு உமேஷ் யாதவ் முன்னேறி பர்பிள் தொப்பியை பெற்றுக் கொண்டார். ரஸ்ஸல் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி ஆரஞ்சு தொப்பியை தனதாக்கிக் கொண்டார். 


மேலும் படிக்க | ஐபிஎல் 2022: சிஎஸ்கே தோல்விக்கு மொயின் அலி செய்த தவறு காரணமா? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR