புது டெல்லி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்காக தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்தின் இளம் வீரர் டாம் பான்டன், தற்போது பிக் பாஷ் லீக் (Big Bash League) தொடரில் பிரிஸ்பேன் ஹீட் (Brisbane Heat) அணிக்காக விளையாடடி வருகிறார். திங்களன்று நடைபெற்ற ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், ஓவர் குறைக்கப்பட்டு, ஆட்டம் தொடர்ந்தது. டாம் பான்டன் 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதில் 2 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி 20 லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் (Brisbane Heat) - சிட்னி தண்டர் (Sydney Thunder)  அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. மழையின் காரணமாக 8 ஓவர் போட்டியாக ஆடப்பட்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் பாண்டன் மற்றும் கிறிஸ் லின் களம் இறங்கினார்கள்.


எதிர் அணியின் பந்து வீச்சாளர்களை டாம் பான்டன் தனது பேட்டிங் வலிமையால் துன்புறுத்தினார் மற்றும் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை அடித்து அரை சதத்தை பூர்த்தி செய்தார். இன்னிங்ஸின் நான்காவது ஓவரை ஆஸ்திரேலியாவின் அர்ஜுன் நாயர் வீசினார். அவரின் முதல் பந்தில் ரன் அடிக்கவில்லை. அதன்பின் வீசிய ஐந்து பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார். அவரது 19 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் உதவியுடன் 56 ரன்கள் எடுத்தார்.


தொடர்ந்து ஐந்து சிக்ஸர்களை அடித்த டாம் பான்டனின் வீடியோவைப் பிபிஎல் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.



இறுதியாக பிரிஸ்பேன் ஹீட் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தனர். சிட்னி தண்டர் பேட்டிங் செய்ய வந்தபோது, மழை குறுக்கிட்டதால், இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் ஆட்டத்தை நிறுத்தப்பட்டது மற்றும் போட்டி ஐந்து ஓவர்களாக குறைக்கப்பட்டது. வெற்றிக்கு 77 ரன்கள் என்ற இலக்கு வழங்கப்பட்டது. மேலும் 17 பந்துகளில் 55 ரன்கள் தேவை என்ற நிலையில், 5 ஓவர் முடிவில் 60 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் டி.எல்.எஸ் முறைப்படி 16 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் வெற்றி பெற்றது.


கடந்த மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் 2020 ஏலத்தில், இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இங்கிலாந்து ஆல்ரவுண்டரான டாம் பான்டனை, அடிப்படை விலையான ரூ .1 கோடிக்கு வாங்கினார்கள்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.