KKR vs CSK: இன்றைய போட்டியில் ஆடக்கூடிய 11 வீரர்களின் பட்டியல் கணிப்பு
முதல் போட்டியில் வெற்றி பெற்று, அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளதால், இன்றைய போட்டியில் கே.கே.ஆர் (KKR) வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, வெற்றி பாதைக்கு திரும்ப நினைப்பார்கள்.
KKR vs CSK, IPL 2021 Dream11 Prediction: தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியன் சூப்பர் லீக் (Indian Super League) தொடரின் 15 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிகள் மோதவுள்ளது. இரு அணிகளும் மும்பையில் உள்ள வான்கேட் மைதானத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 21) மோதுகின்றன. இதுவரை இந்த தொடரின் ஐ.பி.எல் பயணத்தில் கே.கே.ஆர் அணி ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. ஐபிஎல் 2021 புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியை விட 2 புள்ளிகள் பின்தங்கி உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சில திறமையான வீரர்களான சுப்மேன் கில், நிதீஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ஈயோன் மோர்கன் ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினால், இன்றைய போட்டியை வெல்ல வாய்ப்பு அமையும்.
மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளார்கள். இரண்டு வெற்றிகளுக்குப் பிறகு, நான்கு புள்ளிகளை பெற்று, பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு தனது திறமையை இன்னும் வெளிப்படுத்தாத ஷார்துல் தாக்கூரிடமிருந்து கூடுதல் பங்களிப்புகள் சி.எஸ்.கே (CSK) அணிக்கு தேவைப்படும்.
ALSO READ | IPL 2021: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற ஆடுகளத்தைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு, அதற்கு தகுந்த மாதிரி வீரர்களை களம் இறக்கி, அவர்களின் அற்புதமான செயல்திறனை பயன்படுத்திக்கொள்ள சி.எஸ்.கே கேப்டன் தல தோனி வியூகம் வகுப்பார். இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது. முதல் போட்டியில் வெற்றி பெற்று, அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளதால், இன்றைய போட்டியில் கே.கே.ஆர் (KKR) வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, வெற்றி பாதைக்கு திரும்ப நினைப்பார்கள்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீர்கள்:
தினேஷ் கார்த்திக், ஃபாஃப் டு பிளெசிஸ், சுப்மான் கில், ஈயோன் மோர்கன், மொயீன் அலி, ஆண்ட்ரே ரஸ்ஸல், சாம் குர்ரான், தீபக் சஹார், ஷார்துல் தாக்கூர், பாட் கம்மின்ஸ் மற்றும் வருண் சக்ரவர்த்தி
இரு அணிகளிலும் விளையாடக்கூடிய 11 வீரர்கள் பட்டியல்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுப்மான் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, எயோன் மோர்கன், ஷாகிப் அல் ஹசன் / சுனில் நரைன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, ஹர்பஜன் சிங் / சிவிம் மவி
ALSO READ | எம்.எஸ் தோனிக்கு தடை விதிக்கப்படுமா? பதட்டத்தில் csk ரசிகர்கள்: முழு விவரம் உள்ளே
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட் / ராபின் உத்தப்பா, மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாகூர், சாம் குர்ரான், டுவைன் பிராவோ மற்றும் தீபக் சஹார்
இரு அணிகளிலும் உள்ள மொத்த வீரர்கள் பட்டியல்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், கமலேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், லாக்கி பெர்குசன், நிதிஷ் ராணா, பிரசீத் கிருஷ்ணா, குர்கீரத் சிங் மான், சந்தீப் வாரியர், சிவம் மாவி, சுப்மான் கில், சுனில் மோர்கன் வருண் சக்ரவர்த்தி, பவன் நேகி, டிம் சீஃபர்ட், ஷாகிப் அல் ஹசன், ஷெல்டன் ஜாக்சன், வைபவ் அரோரா, கருண் நாயர், ஹர்பஜன் சிங், பென் கட்டிங், வெங்கடேஷ் ஐயர்
சென்னை சூப்பர் கிங்ஸ்: சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி, நாராயண் ஜகதீசப்ன், ருதுராஜ் கெய்க்வாட், கே.எம். இம்ரான் தாஹிர், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, கே கவுதம், சேதேஸ்வர் புஜாரா, எம்.ஹரிசங்கர் ரெட்டி, கே.பகத் வர்மா, சி ஹரி நிஷாந்த், ஆர் சாய் கிஷோர், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR