German Open பாட்மிண்டன் இறுதிச் சுற்றில் லக்ஷ்யா சென்! ஒலிம்பிக் சாம்பியனை தோற்கடித்தார்
ஜெர்மன் ஓபன் பாட்மிண்டன் பட்டப் போட்டியில், இந்திய வீரர் லக்ஷ்யா சென் இறுதிப் போட்டிக்குக் தகுதி... குன்லவுட் விடிட்சார்னுடன் இறுதிச்சுற்று...
இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென், ஜெர்மன் ஓபன் பட்டப் போட்டியில், ஒலிம்பிக் தங்கம் வென்ற விக்டர் ஆக்செல்சனை அதிர்ச்சி தோல்வியடையச் செய்து, இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லக்ஷ்யா சென், ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 போட்டியில் தனது பதக்கத்தை உறுதி செய்தார்.
ஜனவரி மாதம் நடந்த இந்தியா ஓபனில் (India Open 2022 Badminton) தனது முதல் சூப்பர் 500 பட்டத்தை வென்ற 20 வயதான சென், உலகின் நம்பர் 1 மற்றும் டாப்-சீட் ஆக்செல்சனை 21-13 12-21, 22-20 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்த அரையிறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 12ம் இடத்தில் இருக்கும் இந்திய வீரர், 4-0 என்ற கணக்கில் ஹெட்-டு ஹெட் சாதனையைப் பெற்ற தனது போட்டியாளருக்கு எதிராக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ததால், இது ஒரு மறக்கமுடியாத செயபோட்டியாக மாறியது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில், மற்றொரு அரையிறுதியில் மலேசியாவின் லீ சி ஜியாவை வீழ்த்திய தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சார்னை, லக்ஷ்யா சென் எதிர்கொள்கிறார்.
21 நிமிடங்கள் நீடித்த முதல் ஆட்டம் முழுவதும் சென் முன்னிலையில் இருந்தார். அவர் டேனினை முந்திச் செல்ல எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. முதல் ஆட்டத்தில் சென்னின் வேகத்திற்கு ஈடுகொடுக்க ஆக்சல்சென் சிரமப்பட்டார்.
4-1 என முன்னிலை பெற்ற லக்ஷ்யா சென், பின்னர் 9-4 என நீட்டித்தார். ஆனால் ஆக்செல்சென் அதை 7-9 ஆகக் குறைத்தார், அதற்கு முன் சென் தொடர்ந்து நான்கு புள்ளிகளைப் பெற்று அதை 13-7 ஆக மாற்றினார்.
மேலும் படிக்க | India Open பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்ற லக்ஷ்யா சென்
முதல் ஆட்டத்தை எளிதாகக் கைப்பற்றிய சென்னின் தாக்குதல் ஆட்டம் 18-10 என்ற கணக்கில் தொடர்ந்து ஐந்து புள்ளிகளைப் பெற்றது.
வியத்தகு முடிவெடுக்கும் ஆட்டத்தில் இரு வீரர்களும் ஆவேசமாக போராடியதால் கடைசி வரை தங்களின் சிறந்த ஆட்டத்தை பதிவு செய்தனர். ஒவ்வொரு புள்ளிக்கும் இருவரும் கடுமையாக மோதியதால், போட்டி சுவராசியமானதாக மாறியது.
ஆனால், இறுதியில் இந்திய வீரரின் தொடர் போராட்டம், 15-17 மற்றும் பின்னர் 17-19 என்ற செட்கணக்கில் வெற்றியைத் தந்தது.
காலிறுதியில், சென் 21-15 21-16 என்ற கணக்கில் சக இந்திய வீரரும் முன்னாள் முதல் 10 வீரருமான எச்எஸ் பிரணாய்யை வீழ்த்தினார்.
மேலும் படிக்க | கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை - ரோகித்ஷர்மா வாய்ப்பு கொடுப்பாரா? எதிர்பார்க்கும் வீரர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR