’அந்த செல்லத்த அப்படியே தூக்கிட்டு வாங்கடா’ மலிங்கா கண்டெடுத்த முத்து - சிறுவனின் அசத்தல் பவுலிங்
சிறப்பாக பந்துவீசும் சிறுவன் ஒருவனின் வீடியோவை பகிர்ந்திருக்கும் லசித் மலிங்கா, அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும் கண்டுபிடித்து சொல்லுமாறும் ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிஎல் போட்டி நிறைவடைந்திருக்கும் நிலையில், கிரிக்கெட் உலகம் இப்போது சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளும் ஐசிசி தொடர் ஒன்றில் இறுதிப் போட்டியில் மோதிக் கொள்வதால் யார் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்னொருபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் இலங்கை இளம் வீரர் பத்திரனாவுக்கு சர்வதேச கிரிக்கெட்டுக்கான அழைப்பு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | WTC Final 2023: இந்திய அணி தான் சாம்பியன் பாஸ்.. அவரே சொல்லிட்டார்..!
இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த அவரை தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அழைத்து வந்தார். அவர் சிறப்பாக பந்துவீசுவதை பார்த்து சரியாக பயன்படுத்தி இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை சிஎஸ்கே வெல்வதற்கும் முக்கிய பங்காற்றினார். அவருக்கு லசித் மலிங்கா ஏற்கனவே பந்துவீச்சு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும் பத்திரனாவின் வளர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மலிங்கா பேசும்போது, இளம் வீரரான பத்திரனா சிறப்பாக ஐபிஎல் தொடரில் பந்துவீசினார். அவரை சிஎஸ்கே அணியும், அந்த அணியின் கேப்டன் எம்எஸ் தோனியும் சிறப்பாக கையாண்டனர். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் ஈர்த்துள்ளார் பத்திரனா.
விரைவில் இலங்கை அணிக்காக களமிறங்கும் பத்திரனா இன்னும் சாதனைகளை செய்வார் என்று நம்புவதாக மலிங்கா கூறியுள்ளார். அவரைப் போலவே இன்னொரு இளம் வீரரை கண்டுபிடித்துள்ளார் மலிங்கா. சுட்டிக் குழந்தையான அந்த சிறுவன் நல்ல ஆக்ஷனுடன் பந்துவீசுவதால் அவருக்கு சிறப்பாக எதிர்காலம் இருப்பதாக பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். மேலும், அவரை கண்டுபிடித்து தருமாறும் ரசிகர்களுடன் அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோவில் இருக்கும் சிறுவன் குறித்த தகவல் தெரிந்தால் மலிங்காவுக்கு தெரியப்படுத்துங்கள்.