கடைசி ஓவர் திரில்! டெல்லியை வீழ்த்தியது பெங்களூர்!
டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ராயல் சேலஞ்ச் பெங்களூர்!
ஐபிஎல் லீக் போட்டியில் கடைசி நாளான இன்று 56 ஆவது போட்டியில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதியது. டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும் பெங்களூர் அணி 3-வது இடத்திலும் இருந்தது. அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்பிருந்தது. இதனை மனதில் வைத்து இன்றைய போட்டியில் களமிறங்கியது பெங்களூர் அணி.
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். அற்புதமான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் டெல்லி எனக்கு அமைந்தது. பிரித்திவி ஷா 48 ரன்களும், தவான் 43 ரன்களும் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. அதன்பின் களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரீரேயஸ் ஐயர் ரன்கள் அடிக்க தவறினர். கடைசியில் இறங்கிய ஹெட்மையர் 22 பந்துகளில் 29 ரன்கள் அடித்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
பின் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் கோலி 4 ரன்களிலும், படிக்கல் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து வெளியேறினர். இன்றைய போட்டியில் எளிதில் வென்று விடலாம் என்று நினைத்த டெல்லி அணிக்கு பாரத் மற்றும் மேக்ஸ்வெல் தனது அதிரடி ஆட்டத்தால் அவர்களின் நினைப்பை மாற்றினார். கடைசி இரண்டு ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை அற்புதமாக வீசிய நார்தே 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்திலேயே மேக்ஸ்வெல் பவுண்டரி அடித்தார். ஒரு பந்துக்கு 5 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பாரத் அற்புதமான ஒரு சிக்ஸ் அடிக்க இந்த போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாரத் 78 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 51 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இந்த போட்டியின் முடிவின் மூலம் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் மோதவுள்ளன.
ALSO READ T20 உலகக் கோப்பை தொடங்கியவுடன் விதிகளில் மாற்றம் செய்யப்படும் - ICC
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR