புதுடெல்லி: போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடைபெற்ற பெண்களுக்கான 57 கிலோ எடைப் போட்டியில் மணிப்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி லிந்தோய் சனம்பம், பிரேசிலின் பியான்கா ரெய்ஸை தோற்கடித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். சரஜேவோவில் நடைபெற்ற உலக கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் இந்திய இளம்பெண் லிந்தோய் சனம்பம் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கம் வென்றார். போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடைபெற்ற பெண்களுக்கான 57 கிலோ எடைப் போட்டியில் வெற்றிவாகை சூடிய சிறுமி மணிப்பூரைச் சேர்ந்தவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச போட்டியில் ஜூடோ விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் சிறுமி லிந்தோய் சனம்பம் பெற்றுள்ளார்.



 இந்த செய்தியை ஜூடோ கூட்டமைப்பின் டிவிட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.



"லிந்தோய், சர்வதேச அளவில் ஜூடோ தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர். வீராங்கனை பியான்கா ரெய்ஸை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்த நடப்பு ஆசிய சாம்பியன் லிந்தோய் சனம்பம் (W-57kg), 2022 கேடட் உலக சிப்ஷிப் போட்டியில் வென்றார். இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் அவர் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் அனைத்து வயதினருக்குமான முதல் இந்திய சாம்பியன் என்ற சரித்திரத்தைப் படைத்துள்ளா இந்த வீராங்கனை" என்று இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) வெள்ளிக்கிழமை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.



SAI இன் படி, லிந்தோய் ஒரு 'TOPScheme' டெவலப்மெண்ட் குழு தடகள வீரர் ஆவார்.



ஜூலை மாதம், பாங்காக்கில் நடந்த ஆசிய கேடட் & ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் 2022 இன் மூன்றாவது நாளில் அவர் தங்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கைத் திறந்தார். கேடட் போட்டியின் 63 கிலோ பிரிவில் லிந்தோய் தங்கப் பதக்கம் வென்றார்.


மேலும் படிக்க | 94 வயது பெண்மணி உலக தடகள போட்டியில் தங்கம் வென்ற பெருமைமிகு தருணம்


மேலும் படிக்க | பெருமைக்காக அணியில் இருக்கிறாரா விராட் கோலி? இளம் வீரர்களின் சோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! 


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ