பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடர், கடந்த நவ. 20ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், வரும் டிச. 18ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்த குரேஷியா, மொராக்கோ அணிகள் நாளை நடைபெறும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் மோத உள்ளன. இப்போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 8.30 மணிக்கு தொடங்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதோபோன்று, நாளை மறுதினம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில், அர்ஜென்டீனா - பிரான்ஸ் அணிகள் கோப்பைக்காக மோத உள்ளன. இரு அணிகளும் இதுவரை தலா இரண்டு முறை பிபா உலகக்கோப்பையை வென்றுள்ள நிலையில், மூன்றாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் இறுதிப்போட்டியில் சந்திக்க உள்ளன. 


மேலும் படிக்க | ரோகித்சர்மா கேப்டனாக வந்தபிறகு முழுவதுமாக ஓரம்கட்டப்பட்ட தமிழக வீரர்


1978, 1986 ஆகிய தொடர்களில் அர்ஜென்டீனா கோப்பையை வென்றிருந்தது. நடப்பு சாம்பியனான பிரான்ஸ் கடந்த 2018 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு, 1998ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றியிருந்தது. அர்ஜென்டீனாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை தொடராக இது அமைந்துள்ளதால், கோப்பையை வென்ற ஆக வேண்டிய கட்டாயத்தில் அர்ஜென்டீனா உள்ளது. 



ஆனால், பலமிக்க பிரான்ஸ் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வெல்ல காத்திருக்கிறது. இந்நிலையில், பிரான்ஸ் அணிக்கு கூடுதல் நற்செய்தி ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜென்டீனாவின் தொடக்க வீரர்கள் யாரும் நேற்றைய (டிச. 15) பயிற்சியில் பங்கேற்கவில்லை என்றும், இதற்கு மெஸ்ஸிக்கு ஏற்பட்ட காயமே காரணம் என்றும் கூறப்படுகிறது. 


மெஸ்ஸியின் உடற்தகுதியில் தற்போது கேள்வி எழுந்துள்ளதால், அவர் நாளை மறுதினம் நடக்கும் இறுதிப்போட்டியில் களமிறங்குவதும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் மெஸ்ஸி பயிற்சிக்கு வராதது பிரச்னையில்லை என்றும் ஏனென்றால், அணி மேலாளர் லியோனல் ஸ்கலோனி அரையிறுதியில் விளையாடிய அனைத்து தொடக்க லெவன் வீரர்களுக்கு ஓய்வு அறிவித்ததாக கூறப்படுகிறது. 


மெஸ்ஸி தனது தொடை தசையில் பிரச்னை இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் ஃபிட்டாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, இறுதிப்போட்டியில் களமிறங்கி, இந்த தொடரின் அளித்த பங்களிப்பை அதிலும் அளித்து கோப்பை தட்டிச்செல்வார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | FIFA World Cup: உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா! கோப்பைக் கனவை பறிகொடுத்த குரோஷியா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ