கால்பந்து நட்சத்திரமான லியோனெல் மெஸ்ஸி, 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் ஏறக்குறைய 5 மில்லியன் டாலர்கள் அளவிற்கு வரி செலுத்தாமல் ஸ்பெயின் நாட்டு அரசை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான விசாரணை பார்சிலோனா நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது கோர்ட்டில் ஆஜரான மெஸ்ஸி, தன்னுடைய நிதி ஆதாரங்களை நிர்வகிப்பதில், தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. நான் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். எனக்கு எதுவும் தெரியாது. எனது தந்தையின் மீது மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தேன் என்று கூறினார். இந்த விசாரணையில் மெஸ்ஸியின் தந்தை பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் பார்சிலோனா கோர்ட்டில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.


இந்நிலையில் வரிஏய்ப்பு மோசடி வழக்கில் லயோனல் மெஸ்ஸிக்கு 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது என்று ஸ்பெயின் மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. அவருடைய தந்தைக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்பெயின் சட்ட விதிமுறையின்படி அவர்கள் சிறைத் தண்டனையை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.