இங்கிலாந்து மகளிர் தலைமை பயிற்சியாளராக லிசா கீட்லி நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

48 வயதான கீட்லி, மார்க் ராபின்சனுக்குப் பதிலாக, அணியின் முதல் முழுநேர பெண் தலைமை பயிற்சியாளராக பதவியேற்கிறார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியா பெண்கள் மற்றும் இங்கிலாந்து மகளிர் அகாடமியைப் பயிற்றுவித்த லிசா கீட்லி, தற்போது இங்இகலாந்து மகளிர் அணி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்காக ஒன்பது டெஸ்ட் மற்றும் 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கீட்லி தற்போது ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு போட்டியில் மகளிர் பிக் பாஷ் லீக் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.



இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், இது ஒரு பெரிய வாய்ப்பு. இது உலகத் தரம் வாய்ந்த வீராங்கனைகள் நிறைந்த அணி மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பணியாற்றிய சில வீரர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் உற்சாகமானது. என் பணியை தொடங்க நான் ஆவலாக காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


"இங்கிலாந்து தற்போதைய 50 ஓவர்கள் உலக சாம்பியன்கள், அவர்கள் கடந்த ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு வந்தவர்கள். அவர்கள் மிகவும் போட்டித்திறன் வாய்ந்தவர்கள், பெரிய மேடையில் நிகழ்த்தக்கூடிய ஒரு வலுவான குழு வீரர்கள் அவர்களிடம் இல்லையென்றால் அவர்கள் அது போன்ற பெரிய போட்டிகளில் இருக்க மாட்டார்கள். ஏற்கனவே பலம் நிறைந்து காணப்படும் அணியுடன், நானும் இணைந்து பயணிக்க விரும்புகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மகளிர் கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குனர் கிளேர் கானர் தெரிவிக்கையில்., "லிசா ஒரு மாறுபட்ட மற்றும் மிகவும் திறமையான விண்ணப்பதாரர்களின் குழுவில் இருந்து தனித்துவமான வேட்பாளராக இருந்தார். லிசா தனது பாத்திரத்திற்கான தகுதியை வெளிப்படுத்தியதன் மூலம் நேர்காணல் குழுவால் [ஜொனாதன் பிஞ்ச், கானர், ஜான் நீல் மற்றும் டாம் ஹாரிசன்] ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். விளையாட்டைப் பற்றிய அவரது ஈர்க்கக்கூடிய அறிவு மற்றும் வீரர்களைப் பயிற்றுவித்தல் மற்றும் வளரும் ஆர்வம் அவரது தேர்வுக்கு கூடுதல் பலமாய் அமைந்தது என தெரிவித்துள்ளார்.