இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சாதனை பல படைத்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் முதல் போட்டியினை ஆஸி., இழந்துள்ளதன் மூலம், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிநிலையில் உள்ளது.


இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது. காரணம் இப்போட்டியில் இந்திய வீர்ரகள் படைத்த சாதனை பட்டியல் தான். இந்திய வீரர்கள் இப்போட்டியில் நிகழ்த்திய சாதனைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1. 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸி., மண்ணில் இந்தியா வெற்றி...


10 ஆண்டுகளுக்கு பின்னர் விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸிதிரேலியா மண்ணில் டெஸ்ட் போட்டியினை வென்றுள்ளது. முன்னதாக கடந்த 2008-ஆம் ஆண்டு கும்பளே தலைமையிலான டெஸ்ட் அணி பெர்த் மைதானத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றிருப்பது இந்த வரலாற்றினை தற்போது மாற்றியுள்ளது.



2. விராட் கோலியின் தனிப்பட்ட சாதனை...


ஆஸி., அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற விராட் கோலி, ஆஸித்திரேலியா மண்ணில் 1000 ரன்கள் குவித்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். இந்த சாதனையினை விராட் கோலி தனது 18-வது இன்னிங்ஸில் எட்டியுள்ளார். இவருக்கு முன்னதாக 19 இன்னிங்ஸ் விளையாடிய VVS லட்சுமணன், 22-வது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர், இந்திய டெஸ்ட் அணியின் தடுப்புச்சுவர் ராகுல் திராவிட் அகியோர் விராட் கோலிக்கு முன் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



3. 2018-ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட் குவித்த ஷமி...


இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி,.. 2018-ஆம் ஆண்டில் அதிக விக்கெட் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையினை பெற்றுள்ளார். நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் மொகமது ஷமி 5 விக்கெட் குவித்தது குறிப்பிடத்தக்கது.


4. உலக சாதனையினை சமன் செய்த ரிஷாப் பன்ட்...


இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப பன்ட் இப்போட்டியில் 11 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஒரேப்போட்டியில் 11 கேட்ச் பிடித்தவர்கள் என்ற பெருமையினை ஜெக் ரூஸ்வெல், AB de வில்லியர்ஸ் ஆகியோர் படைத்துள்ளனர். இந்நிலையில் ரிஷாப் பன்ட் இந்த சாதனையினை தற்போது சமன் செய்துள்ளார். அதே வேலையில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையினையும் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக விர்தமான் சாஹா 10 கேட்ச் பிடித்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.



5. கங்குளியின் சாதனையினை சமன் செய்த புஜாரா...


இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர் புஜாரா தனது முதல் இன்னிங்ஸில் 123 ரன்கள் குவித்தார். இந்த ரன்கள் மூலம் கங்குளியின் 16 டெஸ்ட் சதங்கள் என்னும் சாதனையினை சமன் செய்துள்ளார். மேலும் 5000 டெஸ்ட் ரனகள் குவித்த 12-வது இந்தியர் என்னும் பெருமையினையும் பெற்றுள்ளார்.