UEFA EURO 2020 Updates: 16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (UEFA Euro 2020) தொடர்கள் மொத்தம் 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகளை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் மொத்தம் நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதேபோல் ஒவ்வொரு பிரிவிலும் மூன்றாவது இடத்தை பிடிக்கும் சிறந்த நான்கு அணிகளும் அடுத்த சுற்றுக்கு (2வது சுற்று) முன்னேறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாவது சுற்றில் மொத்தம் 16 அணிகள் மோதும். இது நாக் அவுட் சுற்று (Knockout Phase) என்பதால், இதில் வெற்றி பெரும் அணிகள் கால் இறுதிக்கு செல்லும். 


கால் இறுதி ஆட்டத்தில் மொத்தம் 8 அணிகள் மோதும். அதில் வெற்றி பெரும் நான்கு அணிகள் அரை இறுதிக்கு செல்லும். பின்னர் இறுதி போட்டியில் நடைபெறும். 


போட்டி அட்டவணை (UEFA EURO 2020 Schedule):
லீக் சுற்று: ஜூன் 11 முதல் ஜூன் 23 ஆம் தேதி வரை நடைபெறும். அடுத்த இரண்டு நாட்கள் (ஜூன் 24, 25) எந்த போட்டியும் இல்லை
2வது சுற்று: ஜூன் 26 முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறும். அடுத்த 2 நாட்கள் (ஜூன் 30,  ஜூலை 01) எந்த போட்டியும் இல்லை
கால் இறுதி: ஜூலை 2 மற்றும் 3 என இரண்டு நாட்கள் நடைபெறும். 
அரை இறுதி: ஜூலை 6 மற்றும் ஜூலை 6 தேதிகளில் நடைபெறும். 
இறுதிபோட்டி (Euro 2020 Final): ஜூலை 11 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.


6 பிரிவுகளில் பங்கேற்றுள்ள அணிகள்:
குரூப் ஏ: இத்தாலி, துருக்கி, வேல்ஸ், சுவிட் சர்லாந்து, 
குரூப் பி: பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, ரஷியா, 
குரூப் சி: நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, வடக்கு மாசி டோனியா, 
குரூப் டி: இங்கிலாந்து, குரோஷியா, ஸ்காட்லாந்து, செக்குடியரசு, 
குரூப் இ: ஸ்பெயின், போலந்து, சுவீடன், சுலோ வாக்கியா, 
குரூப் எப்: போர்ச்சுக்கல், ஜெர்மனி, அங்கேரி, பிரான்ஸ், 


கால்பந்து போட்டி நடைபெறும் 11 நாடுகள் (UEFA EURO 2020 11 host cities):
லண்டன் (இங்கிலாந்து), 
ரோம் (இத்தாலி), 
பகு (அசர்பெய்ஜான்), 
முனிச் (ஜெர்மனி), 
செயின்ட் பீட்டர்ஸ் பர்க் (ரஷியா), 
ஆம்ஸ்டர்டாம் (நெதர் லாந்து), 
புகாரெஸ்ட் (ருமேனியா), 
புடாபெஸ்ட் (அங்கேரி), 
கோபன்ஹேகன் (டென்மார்க்), 
கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து), 
செவில்லி (ஸ்பெயின்)


யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் (Euro Cup winners list)


ஜெர்மனி (1972, 1980, 1996) - மூன்று முறை
ஸ்பெயின் (1964, 2008, 2012) - - மூன்று முறை
பிரான்ஸ் (1984, 2000) - - இரண்டு முறை 


ஒருமுறை சாம்பியன் பட்டம் பெற்றவர்கள்:
சோவியத் யூனியன் (1960), 
இத்தாலி (1968), 
செக்குடியரசு (1976), 
நெதர்லாந்து (1988), 
டென்மார்க் (1992), 
கிரீஸ் (2004), 
போர்ச்சுக்கல் (2016)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR