18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் 14-ஆவது நாளான இன்று மகளிர் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இந்தியா மற்றும் சீனா மோதின. இறுதியில் சீனா 2-0 என்ற கணக்கில் வென்றது. இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இந்திய சார்பில் ஜோஷனா சினப்பா, திபிகா பல்லிகல், சுனேய குருவில்லா மற்றும் தன்வி கன்னா போன்ற வீராங்கனைகள் பங்கேற்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



இந்தியாவை பொருத்த வரை ஸ்குவாஷ் பிரிவில் கடந்த 2010 ஆம் ஆண்டு மூன்று வெண்கல பதக்கம் வென்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கல பதக்கம் வென்றது. தற்போது நடைபெற்று வரும் ஆசியா விளையாட்டு போட்டியில் இதுவரை ஒரு சில்வர், நான்கு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.



 


ஆசிய விளையாட்டு போட்டி 2018 பதக்க பட்டியலில் 8 வது இடத்தில் உள்ள இந்தியா மொத்தம் 68 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.