16:59 02-03-2019
இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வேற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணியின் கேப்டன் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். எனினும் நிதானமாக ஆடிய ஆஸ்திரேலியா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தாலும் ரன்கள் சேர்ந்து வந்தது. ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய தரப்பில் முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினர். கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி வெற்றி பெற 237 ரன்கள் தேவை.


 




16:38 02-03-2019
45.3 ஓவரில் ஆறாவது விக்கெட்டை இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை கடந்துள்ளது.


 




16:14 02-03-2019
37.5 ஓவரில் ஆறாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. க்ளென் மாக்ஸ்வெல் 40(51) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டையும் முகம்மது ஷமி கைப்பற்றினார். 


 




16:05 02-03-2019
37.5 ஓவரில் ஐந்தாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. ஆஷ்டன் டர்னர் 21(23) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை முகம்மது ஷமி கைப்பற்றினார்.


 




15:36 02-03-2019


29.6 ஓவரில் நான்காவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. பீட்டர் ஹான்சாம்காப் 19(30) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். தோனியின் அபாரமான ஸ்டெம்பிங்.


 




15:17 02-03-2019
25 ஓவர் முடிவில் 100 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா அணி. பீட்டர் ஹான்சாம்காப்* 10(16) மற்றும் க்ளென் மாக்ஸ்வெல்* 1(3) ஆடி வருகின்றனர்.



15:11 02-03-2019
23.5 ஓவரில் மூன்றாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. உஸ்மான் கவாஜா 50(76) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.


 




15:05 02-03-2019
20.1 ஓவரில் இரண்டாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. மார்கஸ் ஸ்டோனிஸ் 37(53) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை கெதர் ஜாதவ் கைப்பற்றினார்.



14:23 02-03-2019
பத்து ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா* 23(35) மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ்* 12(22) 



13:58 02-03-2019
ஐந்து ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா* 4(14) மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ்* 7(13) விளையாடி வருகின்றனர்.



13:40 02-03-2019
1.3 ஓவரில் முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி. அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 0(3) ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா வீசிய பந்தில் அவுட் ஆனார்.


 




டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி பீல்டிங் செய்ய உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ஆட்டம் ஆரம்பமாக உள்ளது.


 



 


 



இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.


ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.


அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-௦ என்ற கணக்கி வென்றது. 


தற்போது இருஅணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 13 ஆம் தேதி வரை நடைபெறும். 


இன்று (மார்ச் 2) இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.


20 ஓவர் தொடரை இழந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டியை வெற்றியுடன் இந்தியா அணி ஆரம்பிக்க வேண்டும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.