Asia Cup 2023, IND vs PAK Live Updates: மழை காரணமாக ஆட்டம் ரத்து.. ரசிகர்களுக்கு ஏமாற்றம்

Sat, 02 Sep 2023-10:11 pm,

IND vs PAK, Asia Cup 2023: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தொடர் குரூப் போட்டி குறித்த அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.

IND vs PAK, Asia Cup 2023: ஆசிய கோப்பை தொடரின் குருப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரை நோக்கிய சீசன் தற்போது தொடங்கியிருப்பதால் உச்சக்கட்ட பரபரப்புடன் காணப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகத் தரமான பந்துவீச்சாளர்களை கொண்டுள்ள பாகிஸ்தான் அணியும், வேற லெவல் பேட்டிங் படையை வைத்துள்ள இந்திய அணியும் எதிர்வரும் இந்த மூன்று மாதங்களில் பல முறை மோதும் வாய்ப்பு ஏற்படும். அந்த வகையில், இந்த பரபரப்பான கிரிக்கெட் சீசனில் இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டி அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது. 


இன்றைய போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள இந்த பக்கத்துடன்  இணைந்திருங்கள்.

Latest Updates

  • IND vs PAK: ஆட்டம் ரத்து

    இலங்கையில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் ஆசியா கோப்பை போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெறும். 

  • IND vs PAK Asia Cup 2023

    இந்தியா பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 ஓவர் போட்டிக்கான கட்ஆஃப் நேரம் உள்ளூர் நேரப்படி இரவு 10:27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குள் போட்டி துவங்கவில்லை என்றால், எந்த முடிவும் இல்லாத சூழ்நிலை (no-result scenario) உருவாகும்.  

  • IND vs PAK Asia Cup 2023 - மீண்டும் மழை

    கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நல்ல கிரிக்கெட்டை பார்க்க விரும்பும் அனைவரையும் மழை பாடாய் படுத்தி வருகின்றது. மழை நின்று அம்பயர்கள் மைதானத்திற்கு வந்த நிலையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது. 

  • IND vs PAK Live Updates - மைதானத்திற்கு வந்த நடுவர்கள்

    மழையால் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் துவங்குவதுல் தாமதம் ஏற்பட்டது. தற்போது மழை நின்றுவிட்ட நிலையில், போட்டியின் நடுவர்கள் மைதானத்திற்குள் வந்து மைதான ஊழியர்களுடன் பேசி வருகிறார்கள். 

  • Live IND vs PAK Asia Cup 2023: ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால்?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், பாகிஸ்தானின் சரிசெய்யப்பட்ட இலக்கு பின்வருமாறு இருக்கும்:

    போட்டி 45 ஓவர்களாகக் குறைத்தால் - இலக்கு 254 ரன்கள்.
    போட்டி 40 ஓவர்களாகக் குறைத்தால் - இலக்கு 239 ரன்கள்.
    ஆட்டம் 30 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டால் - இலக்கு 203 ரன்கள்.
    ஆட்டம் 20 ஓவர்களுக்கு சுருங்கினால் - இலக்கு 155 ரன்கள்.

  • IND vs PAK Asia Cup 2023 2nd Innings: மழையால் தாமதம்

    தொடர் மழையால் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மைதானத்தின் நிலைமையை பார்த்தால் ஓவர்கள் குறைக்கப்பட்டு அதற்கேற்ப இலக்கும் குறைக்கப்படலாம் என தெரிகிறது.

  • ஆசியா கோப்பை 2023: பும்ரா அவுட்

    இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

  • ஆசியா கோப்பை 2023: ஷர்துல் தாக்கூர் அவுட்

  • ஆசியா கோப்பை 2023: ரவீந்திர ஜடேஜா

  • ஆசியா கோப்பை 2023: ஹர்திக் பாண்டியா அவுட்

  • ஆசிய கோப்பையில் 5வது விக்கெட்டுக்கான அதிகபட்ச பார்ட்னர்ஷிப்கள் விவரம்:

    214 - பாபர் ஆசம், இப்திகார் அகமது (பாகிஸ்தான்) முல்தான், 2023
    164 - அஸ்கர் ஆப்கான், சமியுல்லா ஷின்வாரி (ஆப்கானிஸ்தான்) ஃபதுல்லா, 2014
    138 - இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (இந்தியா) பல்லேகெலே, 2023
    137 - ஷாஹித் அப்ரிடி, உமர் அக்மல் (பாகிஸ்தான்) தம்புல்லா, 2010
    133 - ராகுல் டிராவிட், யுவராஜ் சிங் (இந்தியா) தம்புல்லா, 2004

  • ஆசியா கோப்பை 2023: இஷான் கிஷன் அவுட்

    நீண்ட நேரத்திற்கு பிராக்கு, கடைசியாக பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு விக்கெட், பாண்டியா-இஷான் பார்ட்னர்ஷிப்பை உடைத்தவர் ஹரிஸ் ரவுஃப். நீண்ட நேரத்திற்கு பிராக்கு, கடைசியாக பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு விக்கெட், பாண்டியா-இஷான் பார்ட்னர்ஷிப்பை உடைத்தவர் ஹரிஸ் ரவுஃப்.  81 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார். அதில் 9 பவுண்ட்ரி மற்றும் 2 சிக்சர் அடித்தார்.

  • Asia Cup 2023: ஹர்திக் பாண்டியா அரை சதம்

    இவர் 62 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். ஆல்-ரவுண்டரான இவரின் இன்னிங்ஸ் ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

  • Asia Cup 2023 இந்தியா vs பாகிஸ்தான்: அரை சதம் அடித்த இஷான் கிஷன்

    ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் அடித்த நான்காவது அரை சதமாகும்.

  • நம்பிக்கை அளிக்கும் பாண்டியா-இஷான் பார்ட்னர்ஷிப்.. 

    27 ஓவர் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.  

  • IND vs PAK: மீண்டும் அஃப்ரிடி

    இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி வருவதை அடுத்து, கேப்டன் பாபர் அசாம் 26ஓவரில் ஷாகின் அஃப்ரிடியை பந்துவீச அழைத்தார். அந்த ஓவரில் அவர் 1 ரன்னை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

  • Asia Cup 2023 இந்தியா vs பாகிஸ்தான்: தடுமாறும் இந்தியா

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    25 ஓவர் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது கிட்டத்தட்ட இன்னிங்ஸின் பாதிக் கட்டத்தில் இருக்கிறோம். பாண்டியா 34 பந்துகளில் 30 ரன்களையும், கிஷன் 46 பந்துகளில் 43 ரன்களையும் எட்டியுள்ளனர். இந்திய அணிக்கு இது ஒரு அருமையான பார்ட்னர்ஷிப்பாக இருக்கிறது.

     

  • LIVE India vs Pakistan: கில் கிளீன் போல்ட் 

    32 பந்துகளை எதிர்கொண்ட கில் 10 ரன்களில் ஹரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அவர் நீண்ட நேரமாக தடுமாறி வந்தார். 14.1 ஓவர்களில் 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இந்தியாவுக்கு சரிந்துள்ளது.

  • IND vs PAK: தொடங்கியது போட்டி

    மழையால் தடைப்பட்ட போட்டி மீண்டும் தொடங்கியது, கில் 6 ரன்களுடனும், இஷான் 2 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்கின்றனர்.

  • LIVE India vs Pakistan: மீண்டும் குறுக்கிட்ட மழை!

    11.2 ஓவர்களில் இந்தியா பேட்டிங் செய்துகொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. தற்போதைய நிலைமையில், இந்தியா 51 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ரோஹித் 11, விராட் 4, ஷ்ரேயஸ் 14 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷாகின் ஷா அஃப்ரிடி 2, ஹரிஸ் ரவுஃப் 1 விக்கெட்டையும் எடுத்தனர். கில் 6 ரன்களுடனும், இஷான் கிஷன் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

  • IND vs PAK: ஷார்ட் பொறியில் சிக்கிய ஷ்ரேயஸ்!

    10ஆவது ஓவரில் ஹரிஸ் ரவுஃப் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்கச் சென்று, ஷ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், இந்தியா 9.5 ஓவர்களில் 49 ரன்களுக்கு தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது.  

  • IND vs PAK Live Updates: அஃப்ரிடியின் அதிரடி

  • IND vs PAK Live Updates: ஏமாற்றினார் கோலி

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், ஷாகின் ஷா அஃப்ரிடியின் பந்துவீச்சில் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், இந்தய அணி 6.3 ஓவர்களில் 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளது. 

  • IND vs PAK: வீழ்ந்தார் ரோஹித்...

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 11 ரன்களில் ஷாகின் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வழக்கம்போல், இன்-ஸ்விங் டெலிவரியில் அஃபிரிடியின் பொறியில் ரோஹித் சிக்கி போல்டை பறிகொடுத்தார். இந்தியா 5 ஓவர்களில் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழந்துள்ளதுய

  • IND vs PAK Live Updates: நின்றது மழை... 

    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை நின்றுவிட்டது. இதனால், போட்டி மீண்டும் தொடங்குகிறது. தற்போது இந்திய அணி 4.2 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 15 ரன்களை எடுத்துள்ளது. ரோஹித் 11 ரன்களுடன் களத்தில் உள்ளார். கில் இன்னும் தனது ரன் கணக்கை தொடங்கவில்லை. 

  • மழை காரணமாக இந்தியா, பாகிஸ்தான் போட்டி தடைப்பட்டிருந்தது. தற்போது, மழை சற்று ஓய்ந்துள்ளதால் மீண்டும் போட்டி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கவலை விட்டு உடனடி தகவலுக்காக இந்த பக்கத்தில் தொடர்ந்திருங்கள்.

  • இந்தியா vs பாகிஸ்தான் போட்டி: மழை காரணமாக ஆட்டம் நிறுத்தம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    4.2 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்துள்ளது. மழை பெய்வதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தம்.

    ரோஹித் சர்மா* 11(18)
    சுப்மன் கில்* 0(8)

  • இந்தியா vs பாகிஸ்தான் போட்டி: முதல் ஓவர் முதல் பவுண்ட்ரி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஒரு ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.

    ரோஹித் சர்மா* 5(5)
    சுப்மன் கில்* 0(1)

  • இந்தியா vs பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு கிடைத்த வீரர்களின் விவரம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இந்தியா: ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

    பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப்

  • இது முக்கியமான போட்டி.. நாங்கள் வெற்றியை பெற முயற்சிப்போம் - பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்

    டாஸ் வெல்லாதது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் கூறுகையில், நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருப்போம், ஆனால் டாஸ் எங்கள் கையில் இல்லை. நாங்கள் இந்த மைதானத்தில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம், எனவே எங்களுக்கு நிலைமைகள் தெரியும். முன்னணி அணிகள் விளையாடுவதால் ஆசிய கோப்பை தொடர் நன்றாக உள்ளது. எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்போம். நாங்கள் அதே அணியுடன் விளையாடுகிறோம், எந்த அணியில் மாற்றமும் இல்லை. சிறப்பாகச் செயல்படுவது எப்போதும் எங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது, நாங்கள் வெற்றியை பெற முயற்சிப்போம். இது அதிக தீவிரம் கொண்ட போட்டி என்றார்.

  • தரமான எதிர்ப்புகளுடன் கூடிய தரமான போட்டி -கேப்டன் ரோஹித் சர்மா

    டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். வானிலை கொஞ்சம் மேகமாக இருக்கிறது, ஆனால் அதைப் பற்றி அதிகம் யோசிக்க முடியாது. நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும், சவாலை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்குப் பிறகு எங்களுக்கு சிறிது ஓய்வு கிடைத்தது. பெங்களூரில் நடந்த பயிற்சிகள் மூலம் அனைவரும் சவால்களுக்கு தயாராக உள்ளனர். இந்த போட்டியில் என்ன சாதிக்க முடியும் என்று பார்ப்போம். இது தரமான எதிர்ப்புகளுடன் கூடிய தரமான போட்டியாகும். ஒரு குழுவாக நாம் என்ன சாதிக்க முடியும் என்பதை நாள் முடிவில் தெரிந்துவிடும். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பும்ரா அணிக்கு திரும்பிவிட்டார்கள். எங்களுக்கு முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள். குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்று அவர் கூறினார்.

  • இந்தியா vs பாகிஸ்தான் லைவ் ஸ்கோர்: டாஸ் வென்ற இந்தியா

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இன்றைய இந்தியா vs பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

     

  • இந்தியா vs பாகிஸ்தான் லைவ் ஸ்கோர்: மழை நின்றுவிட்டது

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடைபெறும் ஆடுகளத்தில் போடப்பட்ட கவர்களை மைதான ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மழை நின்றுவிட்டது, ஆனால் மேகமூட்டமாக இருப்பதால் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

  • IND vs PAK, Team India 8th Player Controversy: 8ஆவது இடப் பிரச்னை?

    8ஆவது இடத்தில் தற்போது ஆல்-ரவுண்டர் தான் விளையாட வேண்டும் என இந்தியா பிடிவாதமாக உள்ளது. எனவே, ஷர்துல் அல்லது அக்சர் படேலை இறக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், ஷமி அல்லது சிராஜ் ஆகியோரில் ஒருவர் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் போகலாம். ஷமி அனுபவம் வாய்ந்த வீரர் அவரை வெளியேற அமரவைப்பது சற்று கடினம், அதேபோல் ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 வீரராக இருக்கும் சிராஜை வெளியே வைப்பதும் சற்று கடினம் தான். இதை இந்தியா எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

  • மைதானத்திற்கு புறப்படும் பாகிஸ்தான் வீரர்கள்

    பாகிஸ்தான் அணி மைதானத்திற்கு புறப்படும் காட்சிகள். மைதானத்தில் மழை தூறல் பெய்து வருவதால், டாஸ் போட இன்னும் ஒரு மணிநேரத்திற்கு அதிகமாக இருப்பதால், அதற்குள் மழை விலகிவிடும் என நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருப்பு.

  • இந்தியா Vs பாகிஸ்தான் நேருக்கு நேர் வெற்றி விவரம்

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மொத்தம் 132 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா 55 போட்டிகளிலும், பாகிஸ்தான் 73 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகள் முடிவடையவில்லை. இரு அணிகளும் கடைசியாக 2018-ம் ஆண்டு ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் சந்தித்தன. பின்னர் அவர்களுக்கு இடையே 2 போட்டிகள் நடந்தன, இரண்டு முறையும் இந்தியா வெற்றி பெற்றது.

  • இந்தியா VS பாகிஸ்தான்: மழை பெய்ய வாய்ப்பு 84% வாய்ப்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது, அதில் கண்டியின் வானிலை நன்றாக இல்லை மற்றும் வானத்தில் மேகங்கள் சூழ்ந்துள்ளது. வெவ்வேறு வானிலை இணையதள அறிக்கையின்படி, போட்டியின் போது மழை பெய்ய 84% வாய்ப்பு உள்ளது எனக் கூறியுள்ளது.

     

  • IND vs PAK, Batting Issues For Team India: இந்தியாவின் பேட்டிங் பிரச்னைகள்

    கே.எல். ராகுல் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்பதால் முதலிரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விக்கெட் கீப்பர் பேட்டராகவும், இடது கை பேட்டர் என்ற கூடுதல் சிறப்புடனமும் இருப்பதால் இஷான் கிஷான் அணியில் இடம்பெறுவார். அந்த வகையில், அவர் சிறப்பாக விளையாடும் ஓப்பனிங்கில் அவரை விளையாட வைக்கலாமா அல்லது பேட்டிங் ஆர்டரை மாற்றாமல், கே.எல். ராகுல் இறங்கும் 5ஆவது இடத்தில் இஷான் கிஷானை இறக்கலாமா என்பது பிசிசிஐ மீது உள்ள மிகப்பெரும் கேள்வியாக உள்ளது. ஒருவேளை இஷான் ஓப்பனிங் செய்தால், கில் 3ஆம் இடத்திற்கும், விராட், ஷ்ரேயஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களுக்கு முறையே தள்ளப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. 

  • ஆசிய கோப்பை 2023: என்ன நடந்தது? வீடியோ பார்க்கவும்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலுக்கு முன்னதாக சந்தித்துக்கொண்ட விராட் கோலி மற்றும் ஹரிஸ் ரவ்ஃப்

     

  • ஆசிய கோப்பை 2023: இந்திய அணிக்கு அழுத்தம் கொடுப்பதே எனது குறிக்கோள் -ஷதாப் கான்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    23 வயதான பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் கூறுகையில், புதிய பந்தை எதிர்கொள்ளும் பழக்கமில்லாத மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவதற்கு, தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை எடுக்க இலக்காகக் கொண்டிருகிக்கிறோம். எனது கருத்துப்படி, எனது விளையாட்டு வியூகம் எளிமையானது, ஒவ்வொரு தொடக்க ஆட்டக்காரருக்கும் எனது விளையாட்டுத் திட்டம் தெரியும். எப்போதும் போல், தொடக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றி பேட்டிங் அணிக்கு அழுத்தம் கொடுப்பதே குறிக்கோள் என்று கூறியுள்ளார்.

     

  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களின் நட்பு நல்ல அடையாளமாக இருக்கிறது

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இந்திய வீரர் விராட் கோலி பாகிஸ்தான் வீரர்களிடம் சென்று பேசிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தெற்காசிய அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் கசப்பான அரசியல் சூழல் இருந்தாலும் இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே வளர்ந்து வரும் உறவு நல்ல அடையாளமாக இருக்கிறது.

     

  • IND vs PAK Probable Playing XI: பிளேயிங் லெவன் கணிப்பு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இந்தியா: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ். 

    பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்.

  • IND vs PAK Squad: இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் விவரம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (காத்திருப்பு வீரர்).

    பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், ஃபக்கர் ஜமான், இமாம் உல் ஹக், சல்மான் அலி ஆகா, இப்திகார் அகமது, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது ஹாரிஸ், ஷதாப் கான் (துணை கேப்டன்), முகமது நவாஸ், உசாமா மிர், ஃபஹீம் அஷ்ரப், ஹரிஸ் ரவூப், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி, சவுத் ஷகீல், தயப் தாஹிர் (காத்திருப்பு வீரர்).

  • IND vs PAK Head To Head: இதுவரை நேருக்கு நேர்?

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 132 ஒருநாள் போட்டிகளில் மோதி உள்ளன. இதில், இந்தியா 55 போட்டிளிலும், பாகிஸ்தான் 73 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நான்கு போட்டிகளுக்கு முடிவில்லை. அதே சமயம், ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 13 ஒருநாள் போட்டிகளில் மோதி உள்ளது. அதில், இந்தியா 7 முறையும், பாகிஸ்தான் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

  • IND vs PAK Toss Decision: டாஸ் ஜெயித்தால் என்ன செய்யலாம்?

    இன்று மழை வர வாய்ப்புள்ளதாக கூறப்படும் சூழலில், டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது பலனை தரலாம். ஏனென்றால், இதுவரை டக்-வொர்த் லீவிஸ் விதிமுறை என்பது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே பெரும்பாலும் சாதகமாக அமைந்திருக்கிறது. எனவே எந்த அணி டாஸ் வென்றாலும் அது பந்துவீச்சை தேர்வு செய்யவே அதிக வாய்ப்பிருக்கிறது. 

  • IND vs PAK Weather Forecast: மழையால் போட்டிக்கு பாதிப்பா?

    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சமீப நாள்களில் கண்டியில் தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளன. ஆட்டம் நடைபெற உள்ள நேரத்தில் 56-78 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூகுள் வானிலை மூலம் தெரிய வருகிறது. 
    மேலும் நாள் முழுவதும் வலுவான மேக மூட்டமாக காணப்படும் என அங்கு எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் தொடக்க கட்டங்களில் 92 சதவீத ஈரப்பதத்துடன், 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு 68 சதவீதம் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஈரமான அவுட்ஃபீல்ட்டை நம்மால் பார்க்க முடியும். 

  • IND vs PAK Toss Update: டாஸ் எப்போது?

    இந்தியா - பாகிஸ்தான் போட்டி இலங்கையின் கண்டியில் உள்ள பல்லேகல்லே மைதானத்தில் இன்று மதியம் 3 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்க உள்ளது. எனவே, டாஸ் மதியம் 2.30 மணிக்கு நடைபெறும். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link