LIVE India vs New Zealand: நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!
T20 உலகக் கோப்பை, இந்தியா vs நியூசிலாந்து நேரடி ஸ்கோர் புதுப்பிப்புகள்: 111 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய நியூசிலாந்து அணி 14.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை, இந்தியா vs நியூசிலாந்து நேரலை: துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 இன் குரூப் 2 போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையிலான போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 110 ரன்களை எடுத்தது. 111 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய நியூசிலாந்து அணி 14.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட் கோலி தலைமையிலான அணி, பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. 151/7 என்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், 13 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கைத் துரத்திய பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடியை இந்தியா தடுக்கத் தவறியது. அதேபோல ஷோயப் மாலிக் மற்றும் ஆசிப் அலியின் அதிரடி காரணமாக நியூசிலாந்து கூட அதன் முந்தைய ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.
இன்று நடந்த ஆட்டத்தில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பிய இந்திய அணியை மிக எளிதாக நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
Latest Updates
நியூசிலாந்து அணி வெற்றி!!
India vs New Nealand: 111 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய நியூசிலாந்து அணி 14.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியின் இரண்டாவது விக்கெட்
India vs New Nealand: 12.4 ஓவரில் நியீசிலாந்து அணியின் மிட்செல் 49 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
10 ஓவர் முடிவில்....
India vs New Nealand: 111 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய நியூசிலாந்து அணி 10 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து: 83/1
5 ஓவர் முடிவில்....
India vs New Nealand: 111 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய நியூசிலாந்து அணி 5 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 1 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து: 30/1
இந்தியா: 20 ஓவர்களின் முடிவில் 110/7
India vs New Nealand: இந்திய அணியின் பேட்டிங் முடிந்த நிலையில், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்துள்ளது.
ஜடேஜா - 26
ஷமி - 0அடுத்தடுத்து விழும் விக்கெட் ...
18.4 ஓவரில் ஷர்துல் தாக்குர் வந்த வேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
இந்திய அணியின் ஸ்கோர் - 94/7
ஹார்திக் பாண்டியா பெவிலியன் திரும்பினார்.
18.1 ஓவரில் இந்திய அணியின் ஹார்திக் பாண்டியா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் ஸ்கோர் - 94/6
15 ஓவர்கள் முடிவில்..
India vs New Nealand: பதினைந்து ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இந்தியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது.
ஹார்திக் பாண்டியா - 13
ரவீந்திர ஜடேஜா - 0ரிஷப் பந்த் அவுட்...
14.3 ஓவரில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்த் அவுட் ஆனார்.
இந்திய அணியின் ஸ்கோர் - 70/5
விராட் கோலி அவுட்...
10.1 ஓவரில் இந்திய அணியின் கேப்டன், விராட் கோலி அவுட் ஆனார்.
இந்திய அணியின் ஸ்கோர் - 48/1
10 ஓவர்கள் முடிவில்..
India vs New Nealand: பத்து ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இந்தியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்துள்ளது.
ரோஹிட் ஷர்மா அவுட் ஆனார்......
7.2 ஓவரில் இந்தியாவின் ஹிட் மேன் ரோஹித் ஷர்மா அவுட் ஆனார்.
இரண்டாவது விக்கெட்டை இழந்தது இந்தியா...
5.5 ஓவரில் கே. எல். ராகுல் 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
5 ஓவர்கள் முடிவில்..
India vs New Nealand: ஐந்து ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இந்தியா அணி 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது.
கே.எல். ராகுல் - 13 (12)
ரோஹித் ஷர்மா - 12 (10)இந்தியாவின் முதல் விக்கெட்
இந்திய அணி 11 ரன் எடுத்த நிலையில், இஷாந்த் கிஷனின் விக்கெட் விழுந்தது. இஷாந்த் கிஷன் 4 ரன்களுக்கு அவுட் ஆனார்.
வெற்றிக்காக காத்திருக்கும் இந்திய ரசிகர்கள்
கிரிக்கெட் என்பது இந்தியாவில் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு, நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும் ஒரு உத்தி. டி20 உலகக் கோப்பைக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
India vs New Zealand Toss
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 -ல் இன்று இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. சற்று முன்னர் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.