இந்திய ஒருநாள் போட்டி கேப்டன் தலைமை தாங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும், துணைக் கேப்டன் கேப்டனாக இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் இன்றைய ஐபிஎல் போட்டியில் மோதின. ஒரு வெற்றியைக் கூட பெறாத மும்பை அணி, லக்னோ அணியை வீழ்த்தியாவது வெற்றிக் கணக்கை தொடங்கலாம் என நினைத்து, பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. லக்னோ அணியில் கே.எல்.ராகுலும், குயின்டன் டிகாக்கும் களமிறங்கினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் சர்ச்சையை ஏற்படுத்தும் அம்பயர் நிதின் மேனன் யார்?


முன்னாள் அணியினான மும்பைக்கு பேட்டிங்கில் பாடம் புகட்ட வேண்டும் என நினைத்த டிகாக் ஒரு பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு அவசரம் காட்ட 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே, ஒருநாள் போட்டி என நினைத்து  விளையாடி விட்டார். அவர் 22 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க, அவருக்கு பிறகு வந்த ஸ்டொயினஸ் வந்த வேகத்தில் டக்அவுட்டானார். அப்போது லக்னோ அணி 103 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 



அடுத்து வந்தவர் முன்னாள் மும்பை வீரரான குருணால் பாண்டியா. இவரும் வந்த வேகத்தில் வெளியேற, மறுமுனையில் கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய ராகுல் சதமடித்து அசத்தினார். இதனால், 20 ஓவர் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. 103 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் கேப்டன் ராகுல்.



169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. பார்ம் அவுட்டில் தவிக்கும் இஷான் கிஷன் டெஸ்ட் மேட்ச்போல் விளையாடிக் கொண்டிருந்தார். 20 பந்துகளை சந்தித்த அவர், 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கேட்ச் ஆனார். அவரின் பேட்டில் பட்ட பந்து கீப்பர் குயின்டன் டிகாக்கின் காலில் பட்டு, ஸ்லிப்பில் நின்ற ஹோல்டரிடம் கேட்சானது. கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். 


அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுக்கும், பிரெவிஸ் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பொல்லார்டும் சோபிக்க தவறியதால், மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 8வது தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடரில் 8 தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனைக்கும் மும்பை சொந்தமானது.


மேலும் படிக்க | ’மைதானத்தில் நடந்த களேபரம்’ சிறுவனிடம் மொக்கை வாங்கிய மும்பை ரசிகர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR