சர்வதேச சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி 21 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென ஸ்பான்சர் இல்லாததால் புனேவுக்கு மாற்றப்பட்டது. பின்னர், மீண்டும் இந்தாண்டு முதல் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டது. சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் இந்த முறை பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டிகள் அனைத்தும், நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT மைதானத்தில் நடைபெற்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செப். 13ஆம் தேதி தொடங்கிய இத்தொடரின் இறுதிநாளான இன்று, ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா - நடேலா டிசலமிட்ஜ் ஜோடியும், லூயிசா ஸ்டெபானி (பிரேசில்) - கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடியும் மோதின. 


மேலும் படிக்க | 'எனக்கு பசி இன்னும் அடங்கல...' - முதல் கிராண்ட்ஸ்லாமை முத்தமிட்ட பிறகு கார்லோஸ் கர்ஜனை


போட்டியின் தொடக்கத்தில் இருந்தே கனடா-பிரேசில் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆதிக்கம் செலுத்தியது. முதல் செட்டை 6-1 வென்ற இந்த இணை இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் வென்று, ரஷ்ய ஜோடியை எளிதாக வீழ்த்தியது. இதன்மூலம், 2022ஆம் ஆண்டுக்கான சென்னை ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவுக்கான கோப்பையை லூயிசா ஸ்டெபானி (பிரேசில்) - கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடி கைப்பற்றியுள்ளது.



கோப்பையை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், லூயிசா ஸ்டெபானி, கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி ஜோடியிடம் வழங்கினார். அப்போது, மாநிலங்களைவ உறுப்பினர் கனிமொழி, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர். 


மேலும், இதே மைதானத்தின் மற்றொரு ஆடுகளத்தில் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில், போலந்து வீராங்கனை மக்தா லினெட், செக் குடியரசு நாட்டின் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா உடன் மோதிவருகிறார். இந்த போட்டியின் முதல் செட்டை மக்தா லினெட் 6-4 என்ற கணக்கில் வென்றுள்ளார். இரண்டாம் செட்டில் லிண்டா 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார். 



இந்த போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆகியோர் நேரில் பார்த்து வருகின்றனர். போட்டி நிறைவடைந்த பின்னர், வெற்றிப் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோப்பை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 'இந்த நாள் வரவே கூடாது என்று விரும்பினேன்' - பெடரருக்கு நடாலின் பிரியாவிடை ட்வீட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ