சென்னையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் உடன் இருந்தார். இந்த சந்திப்பிற்கு பின் முதலமைச்சர் செய்தியாளர் சந்தித்தார். அதனை இங்கு காணலாம்.
Mekadatu Dam Issue Annamalai: மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறியதற்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து இதுவரை கண்டனம் வரவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரித்துறையினர் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு விசாரணை உகந்தது அல்ல என மனுவை திருப்பி அனுப்பியது சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை.
ஜப்பானுக்கு சுற்றுலா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் புல்லட் ரயிலில் பயணிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் ஆனது சுட்டு எரிந்து வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்குச் சென்றது தொழில்களை ஈர்த்து தமிழ்நாட்டில் வருமானத்தை பெருக்குவதற்கா அல்லது அவர்களது வருமானத்தை பெருக்கவா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வரின் சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தால் பன்னாட்டு கல்வித்தரணை தமிழ்நாட்டு மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்றிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார்.