மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா நேவால் தோல்வி

சீனாவின் பகுதியான மக்காவ் பிராந்தியத்தில், மக்காவ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.
மக்காவ்: சீனாவின் பகுதியான மக்காவ் பிராந்தியத்தில், மக்காவ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் ஜங் இமானை இன்று எதிர்கொண்டார். ஜங் இமானை எதிர்த்து விளையாடிய சாய்னா சற்றும் எதிர்பாராத வகையில் 21-12, 21-17 என்ற நேர் செட்களில் அவரிடம் தோல்வியைத் தழுவினார்.
தோல்வி காரணமாக சாய்னா நேவால் மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து வெளியேறினார்.